நீதித்துறை மீது அவதூறு பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி; பாஜ குற்றச்சாட்டு
புதுடில்லி: நீதித்துறை தொடர்பான காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்களுக்கு, பாஜவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நீதிபதிகள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். எமர்ஜென்சி காலத்தில், இந்திரா மூத்த நீதிபதிகள் மூவரைத் தவிர்த்துவிட்டு, ஒருவரைத் தலைமை நீதிபதியாக நியமித்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில், சோனியா நீதிபதிகள் தேர்வுச் செயல்பாட்டில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே. தேசிய ஆலோசனைக் குழு'வின் தலைவராக சோனியா வகித்த பங்கைப் பற்றியும் அனைவரும் அறிவர். நீதித்துறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டு முறை இதுதான். இது இந்த நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்த உண்மை.
இந்திய நீதித்துறை உலகின் மிக நேர்மையான நீதித்துறை அமைப்புகளில் ஒன்றாகும். இந்திய நீதித்துறையின் மீதும் அதன் செயல்பாடுகள் மீதும் அவதூறுகளைக் கூறுவதன் மூலம், நாட்டில் குழப்பத்தை உருவாக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது.
அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்களை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம், காங்கிரஸ் அந்த நிறுவனங்களின் கண்ணியத்தைக் குலைப்பது மட்டுமின்றி, நாட்டிற்குள் குழப்பமான சூழலை உருவாக்கவும் பாடுபடுகிறது. இவ்வாறு சம்பித் பத்ரா கூறியுள்ளார்.
மேலும்
-
டேப் ஒட்டிய விமான ஜன்னல்; பீதியை கிளப்பியது ஸ்பைஸ்ஜெட்
-
தீபாவளிக்கு முன் தங்கம் வாங்குவோருக்கு நிம்மதி
-
டிவிகளில் ஆபாச விளம்பரங்கள் முன்தணிக்கை செய்ய வழக்கு: அரசு தரப்பிற்கு உத்தரவு
-
செம உதை வாங்கி மண்ணைக் கவ்விய காங்கிரஸ்! : அந்துமணி பதில்கள்
-
ஸ்டார்ட் அப், ஏ.ஐ.எப்., பண்டுகளில் பி.எப்., பணத்தை முதலீடு செய்ய திட்டம்
-
சந்தை விலை நிலவரம்