டேப் ஒட்டிய விமான ஜன்னல்; பீதியை கிளப்பியது ஸ்பைஸ்ஜெட்

2

குப்பை கொட்டாதீங்க; தப்பை தடுக்கிறது கேமரா



மும்பை மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க, ஏ.ஐ., தொழில்நுட்ப கேமராக்களை நிறுவியுள்ளது மாநகராட்சி. மாஹிம் பகுதியில் நிறுவப்பட்ட கேமராவில் பதிவான காட்சியை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. குப்பை கொட்டிய ஒருவரை கண்டறிந்த ஏ.ஐ., கேமரா, அவரை உடனடியாக எச்சரிக்கிறது. கேமராவுடன் இணைந்துள்ள ஸ்பீக்கரில், எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகிறது. நகரை சுத்தமாக வைத்திருக்க உதவும்படி அறிவுரையும் கூறுகிறது.
Latest Tamil News
பயந்து போன அந்த நபர், தான் கொண்டு வந்த குப்பையை மீண்டும் கையில் எடுத்துச் செல்கிறார். வலைதளங்களில் பரவிய இந்த வீடியோவை கண்ட ஒருவர், 'இதே கேமராவை மும்பை மாநகராட்சி ஆபீசிலும் நிறுவி, வேலை செய்யாமல் இருக்கும் ஊழியர்களை கண்டறிய வேண்டும்' என, கமென்ட் செய்துள்ளார். மற்றபடி பலரும், இந்த முயற்சியை பாராட்டியுள்ளனர்.

'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பீதியை கிளப்பியது 'ஸ்பைஸ்ஜெட்'



சற்று நேரத்தில், 'டேக் ஆப்' ஆக வேண்டிய அந்த, 'ஸ்பைஸ்ஜெட்' விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், ஜன்னலில் டேப் ஒட்டியிருப்பதையும், அது தளர்ந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். விமான ஊழியரிடம் கேள்வியும் எழுப்பினார். அவர்களுக்கு இடையே நடந்த காரசார வாக்குவாதத்தின் வீடியோ வைரலாகியுள்ளது. 'அதனால் எந்தப் பாதுகாப்புப் பிரச்னையும் இல்லை' என, கூறிய விமான ஊழியர், 'இந்த விமானத்தில் பயணிப்பது சிரமம் என்றால், நீங்கள் பயணத்தை தவிர்த்து விடலாம்' என, துடுக்காக பேசினார்.

அவரது பேச்சு பயணியருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 'எங்கள் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்' என்ற பயணியின் கேள்விக்கு, தானே பொறுப்பேற்பதாகவும் அந்த ஊழியர் பதிலளித்தார். இந்த வாக்குவாதத்தின் வீடியோவை கண்ட வலைதளவாசிகள், ஸ்பைஸ்ஜெட் பற்றிய தங்கள் அனுபவத்தை பதிவிட்டு வருகின்றனர்.

கடலில் விளம்பரமா? கொந்தளித்த நெட்டிசன்கள்



மும்பையில், ஜுஹூ, பாந்த்ரா - வொர்லி கடல் பாலம் போன்ற இடங்களில் மிதக்கும் விளம்பர படகுகளையும், விளம்பர பலகைகளையும் நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Latest Tamil News
'இனி கடலுக்கு பதிலாக, மிதக்கும் விளம்பரங்களை பார்த்து ரசிக்கலாம்' என்பது ஒருவரின் கேலியான பதிவு. 'நாங்கள் அழகான அரபிக்கடலை தான் ரசிக்க விரும்புகிறோம்; விளம்பரத்தை அல்ல' என்கிறார், இன்னொருவர். இனி காதலர்களின் மாலைப்பொழுதுகளில் விளம்பரங்கள் குறுக்கிடும் என்பது போன்ற கேலி, கிண்டல் பதிவுகளும் வெளியாகி வருகின்றன.

'நகர வாழ்க்கையின் அன்றாட அழுத்தங்களை மறந்து அமைதியாக பொழுதுபோக்க, மும்பைவாசிகளுக்கு இருக்கும் ஒரே இடம் அரபிக்கடல் தான்; அதையும் மாநகராட்சி பறிக்கிறது' என்று ஆதங்கப்படுகின்றனர், வலைதளவாசிகள்.

சிறந்த ஊழியருக்கு கார் பரிசு; துபாய் நிறுவனம் தாராளம்



துபாய் ரியல் எஸ்டேட் நிறுவனம், சிறப்பாக செயல்பட்ட ஊழியருக்கு சொகுசு கார் பரிசளித்த செய்தி, வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. 'ரிச்கீ பிராப்பர்டீஸ்' நிறுவன ஊழியரான நடாலியா சாவெஸ் என்பவர், 2 ஆண்டுகளில் 4,761 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருந்தார். அவரை பாராட்டும் வகையில் நிறுவன சி.இ.ஓ., டாபன் அத்மன், அவருக்கு 4 சிறப்பு விருதுகள் வழங்கினார். கூடவே, 'லம்போர்கினி' சொகுசு காரையும் பரிசளித்தார். அந்த காரின் வெவ்வேறு மாடல்கள், துபாயில் 2.3 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரையிலான விலையில் விற்பனையாகின்றன.
Latest Tamil News

கனவுப்பயணம் கசந்தது; இந்தியப்பெண் குமுறல்



எகிப்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பெண் ஒருவர், மறைமுகக் கட்டணம், டாக்ஸி கட்டணக் கொள்ளை, தொடர் டிப்ஸ் கோரிக்கையால் பயணம் கசந்ததாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். 'உலகின் மிக அதிகம் ஏமாற்றப்படும் நாட்டில் தங்கினேன்' என்ற அவரது பதிவு, வலைதளங்களில் வேகமாக பரவியது.
Latest Tamil News
கிசா பிரமிடு வளாகத்துக்கு ஒரு டிக்கெட், ஒவ்வொரு பிரமிடுக்குள்ளும் செல்லத் தனிக் கட்டணம், அங்கு கிடைத்த பொருட்களைக் காணும் அருங்காட்சியகங்களுக்கு டிக்கெட் என எல்லாமே மெனு போல இருந்தது என வருத்தப்படுகிறார். 'செயலியில் காட்டுவதை காட்டிலும் 10 மடங்கு கட்டணத்தை டிரைவர்கள் கேட்டு பெற்றனர். கனவுப்பயணம் என நினைத்திருந்தேன். கடைசியில், எப்போது முடியும் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன்' என்கிறார், அந்தப்பெண்.

Advertisement