வாழ்வியல் முகாம்

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் செயலாளர் நந்தாராவ் தலைமையில் இயற்கை வாழ்வியல் முகாம் நடந்தது. பொருளாளர் செந்தில்குமார், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். அரசு இயற்கை மருத்துவர் பிரியங்கா பேசுகையில் ‘‘அரிசியை குறைத்து வரகு, சாமை, குதிரைவாலி தானியங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாலையில் யோகா, தியானப் பயிற்சிகள் செய்தால் முழுமையான ஆரோக்கியம் சாத்தியமாகும்’’ என்றார். உளவியல் நிபுணர் நாகராஜ், யோகா ஆசிரியர்கள் நந்தினி, பழனிகுமார் கலந்து கொண்டனர்.

Advertisement