இந்திய மாணவர் சங்கம் கருத்தரங்கம்

சிதம்பரம்: சிதம்பரத்தில், இந்திய மாணவர் சங்கம் சார்பில், ‘வாக்குரிமையும் ஜென்சி போராட்டமும்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சவுமியா வரவேற்றார். மாநிலச் செயலாளர் சம்சீர்அகமது, வாக்குரிமையின் முக்கியத்துவம், மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேசினார்.

மாவட்டதுணைச் செயலாளர்கள் சிவநந்தினி, சிவன்ராஜ், செங்கதிர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அன்பு, கனிஷ்கர், திருமால், விமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement