ராம்பாக்கத்தில் சாலை மறியல் 8 பேர் மீது வழக்குப் பதிவு
விழுப்புரம்: வளவனுார் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த ராம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன், 30; இவர் தலைமையில் இன்று (அக்.,26) காலை 8:50 மணிக்கு ராம்பாக்கம் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, ராம்பாக்கம் ஏரியில் கருவேல மரங்கள் ஏலம் விட்ட பணத்தில் முறைகேடு நடந்ததாக அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்த வளவனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, காலை 9:40 மணிக்கு அரவிந்தன் உள்ளிட்டோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து அரவிந்தன் உட்பட 8 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அசிங்கமா போச்சு குமாரு... பின்தொடர்வோர் 21 லட்சம் பேர்; கிடைத்த ஓட்டு 33 மட்டுமே!
-
கல்பாத்தி கோவிலில் தேரோட்டம் மாயவரம் கோவிலுக்கு அழைப்பு
-
நெற்கதிர் அறுவடை திருவிழா
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை; பால் பொருட்கள் விலை உயர்வு; ஆவின் நிர்வாகம் சொல்வது இதுதான்!
-
ஐநா பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம்; இந்தியா வலியுறுத்தல்
-
இயல்நிலைப்புக்கு திரும்பியது நீலகிரி; சுற்றுலா மையங்கள் திறப்பு
Advertisement
Advertisement