தீக்குளித்து முதியவர் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன், 65; இவருக்கு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றில் கட்டி இருந்ததால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில், சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர், நேற்று (அக்.,25) வீட்டின் மாடியில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.

பலத்த தீக்காயம் அடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement