தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தலைமை செயலகத்தில் நேர்மைக்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

புதுச்சேரி அரசு சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி தலைமை செயலகத்தில் நேர்மைக்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை செயலர் சரத்சவுகான் நேர்மைக்கான உறுதிமொழியை வாசித்தார். தலைமை செயலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் அரசு செயலர் முத்தம்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement