கேபின் விழுந்து எலக்ட்ரீஷியன் பலி
விழுப்புரம்: விழுப்புரத்தில் டேங்கர் லாரியில் பழுது பார்த்தபோது கேபின் விழுந்ததில் எலக்ட்ரீஷியன் இறந்தார்.
விழுப்புரம் சாலாமேட்டைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 51; எலக்ட்ரீஷியன். இவர் இன்று (அக்.,26) விழுப்புரம் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் டேங்கர் லாரியின் கேபினை துாக்கிவிட்டு பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, கேபின் திடீரென அரிகிருஷ்ணன் தலையில் விழுந்ததில் படுகாயமடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்து போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை வாங்கியதாக, ஆவின் டெக்னிக்கல் மேலாளரான விழுப்புரம் ஆடல் நகரைச் சேர்ந்த சாமிநாதன், 55; என்பவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆசம் கான் பல்கலையின் ரூ.1,170 கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
-
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தம்; தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
-
அமெரிக்காவில் முறைப்படி தடம் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அமைப்பு: தவறான பிரசாரங்களை முறியடிக்க திட்டம்!
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
Advertisement
Advertisement