இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தம்; தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: தெற்கு அந்தமான் ஒட்டிய வங்கக் கடலில், இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: மத்திய மேற்கு வங்கக் கடலில், மிக தீவிர புயலாக நிலவிய 'அர்னாப்' நேற்று அதிகாலை, 2:00 மணி முதல் காலை, 8:00 மணிக்குள், ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்பகுதியில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது.
இது, நேற்று காலை, 8:30 மணி அளவில், தீவிர புயலாகவும், அதன்பின் பிற்பகலில் புயலாகவும் வலுவிழந்து, ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய வங்கக் கடலில், வளி மண்டலத்தில் சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, அப்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று உருவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆசம் கான் பல்கலையின் ரூ.1,170 கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
-
அமெரிக்காவில் முறைப்படி தடம் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அமைப்பு: தவறான பிரசாரங்களை முறியடிக்க திட்டம்!
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
-
ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்