ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-நமது நிருபர்-
அனைத்து துறையிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இதன் தாக்கத்தால் முன்னணி ஐடி நிறுவனத்தில் கூட பணிநீக்கம் தொடர்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
கணினியில் செய்யப்படும் எந்தவொரு வேலைக்கும் கூட ஏஐ தொழில்நுட்பம் மிகவும் பேருதவியாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. ஏஐ தொழில்நுட்பத்தின் செயல்பாடு குறித்து ஸோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு முக்கிய தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
அவரது பதிவு: கணினியில் செய்யப்படும் எந்தவொரு பணியிலும் இப்போது ஒரு ஆபத்து உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்து முடிக்க முடியும்.
இந்த ஆபத்து நாளுக்கு நாள் உண்மையாகி வருகிறது. இதன் பொருள், கணினியில் பணிபுரியும் 90 சதவீத மக்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்று அர்த்தமல்ல.
உதாரணமாக, முன்பு மென்பொருள் பொறியாளர்களையோ அல்லது டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் நிபுணர்களையோ பணியமர்த்தும் வசதி இல்லாத தொழில்துறைகள், இப்போது அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள முடியும்.
பொருளாதாரத்தில் ஒரு மறுசீரமைப்பு நிகழப்போகிறது என்பதுதான்; இத்தகைய மாற்றத்தைச் சந்திக்கும் காலம் சற்று கடினமானதாகவே இருக்கும். நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம், இந்த மாற்றம் வரப்போகிறது என்பதை ஏற்றுக்கொண்டு, அதற்குத் தயாராவது தான். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறினார்.
10 பேர் சேந்து ஒரு வேலையை முடிக்க 8 நாள் ஆகும்னா 4 பேரும் ஒரு ஏ. ஐ யும் சேந்து அதே வேலையை முடிக்க எத்தனை நாளாகும்? வேலை முடிந்ததும் அந்த நாலுபேருக்கும் எத்தனை நாளில் சீட்டு கிழியும்?
அது எந்த வேலை என்பதைப் பொறுத்து .... ஏ ஐ தொழில்நுட்பம் இன்னும் வளரவேண்டியுள்ளது ....
வங்கிகளில் கணினிப் பயன்பாடு கூடாது, பணியாளர்களுக்கு பாதிப்பு என கம்யூனிஸ்டு யூனியன்கள் போராட்டம் நடத்தியது வரலாறு. அதற்கு முன் வயல்களில் ட்ராக்டர் பயன்படுத்தக்கூடாது என்றும் மறியல் போராட்டம் நடத்தினர். மாற்றம் ஒன்றே மாறாதது.
உங்களுக்கு அடிப்படை அறிவே இல்லை. அவர் என்ன சொல்கிறார் என்றால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் குறைவான நபர்களைக் கொண்டே அதிக வேலைகளைச் செய்ய முடியும். எனவே, போட்டியை எதிர்கொள்ள நீங்கள் கூடுதல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இட ஒதுக்கீட்டின் reservation/quota அடிப்படையில் கல்வி பயின்றவர் என்றால், நீங்கள் பின்தங்கிவிடுவீர்கள்.
AI-ஐப் பயன்படுத்தி ஒரு திறமையான நபர் பத்து பேர் வேலையைச் செய்ய முடியும் என்று ஸ்ரீதர் வேம்பு சொல்லுகிறார். இது சரியா, தவறா என்று ஸ்ரீதர் வேம்பு நன்றாகச் சிந்திக்க வேண்டும். காரணம், நூற்றி நாற்பது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பத்து பேர் செய்யக்கூடிய வேலையை ஒரு ஆள் செய்தால் என்னவாகும்? ஒருவன் பணக்காரனாவான். மீதி பத்து பேர் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். இந்த நிலை இந்தியாவுக்குத் தேவையா? இதைச் சற்று யோசித்துப் பாருங்கள் ஸ்ரீதர் வேம்பு இதில் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் அல்ல...நன்று
AI, பத்து நபர்களின் வேலையை எளிதாக்கி, அவர்கள் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி செய்ய உதவினால், அது வேலைவாய்ப்பைப் பறிப்பதல்ல மனித ஆற்றலை மேம்படுத்துவதாகும்.கணினி அறிமுகமானபோதும், தொலைக்காட்சி ஒளிபரப்புத் துறை வளர்ந்தபோதும் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் புதிய தொழில்களும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகின.AI: புதிய மென்பொருட்கள், தரவு மையங்கள், AI பராமரிப்பு, பாதுகாப்பு, பயிற்சி, புதிய சேவைகள் போன்ற துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.AI விஷயத்திலும் மொத்த வேலைவாய்ப்பின் மீதான தாக்கத்தை ஆதாரங்களின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும்.
AI என்பதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.
1. பத்து பேர் செய்யும் வேலையை ஒரு நபர் செய்யலாம் என்றால், அந்த ஒருவர் சாப்பிட்டுவிட்டால் 10 பேர் சாப்பிட்டுவிட்டார்கள் என்று ஆகிவிடுமா?
2. நமது நாடு மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு. அதிக நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டுமே தவிர, வேலை வாய்ப்புகளை பறிக்க கூடாது.
3. தினம் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துபவர்கள் நமது நாட்டில் பாதிப்பேர் உள்ளார்கள். அவர்கள் AI -ஐ சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா?
4. ஒருவன் வசதியாக வாழ நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதா?
5. AI- மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை முழுவதுமாக அழித்துவிடும். அழித்துக்கொண்டிருக்கிறது.
6. ஏற்கனவே Android மற்றும் MEDIA -க்கள் மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் கண் பார்வையை பாதித்துவிட்டது. நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணங்களை அழித்துவிட்டது. பள்ளிக்கு சென்று குழந்தைகளை பாருங்கள் - எத்தனை குழந்தைகள் மிக சிறிய வயதில் கண்ணாடி அணிந்துள்ளார்கள் என்று
7. AI -நமக்கு வேண்டாம் என்று குறள் கொடுங்கள் மக்களே
Dear Vembu,
I am a software developer and tech architect 38+ years of experience I am using AI equivalent to 100 people work in short I might turn out to be a competitor of ZOHO itself because I am already in the halfway of completing the complete business automation tool which has sevral AI/Agentic/LLM/ML related facilities and certain things are indigenously developed by me itself. IT IS NOT 10 IT IS 100 PEOPLE WORK IT CAN DO WITHIN A MONTH OF SUBSCRIPTION
In that case it may unemployment problems. If I am not wrong.
in other words the technology has been developed to destroy
திறமையான நபர் யார்?
உங்க கம்பெனில ஆள் குறைப்பு வருதோ?
ஆனா அப்பாவிக்கு எந்த கவலையும் இல்லை...வேளாவேளைக்கு சோறு வந்துடும்...இப்படியே கிண்டல் பண்ணிட்டு மானங்கெட்ட வாழ்க்கைமேலும்
-
'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பாதுகாப்பில் அலட்சியத்தை கண்டு ஸ்பைஸ்ஜெட் விமான பயணி ஆவேசம்
-
நாக்பூரில் வென்று கணக்கை துவக்கியது காங்கிரஸ்: கர்நாடகா, உ.பி., மேல்சபை தேர்தலில் பா.ஜ., ஆதிக்கம்
-
சிறப்பாக பணியாற்றிய ஊழியருக்கு சொகுசு கார் பரிசு வழங்கிய துபாய் நிறுவனம்
-
வன்முறையில் ஈடுபட்டால் அரசு வேலை கிடையாது; விதிகளை கடுமையாக்கியது உ.பி., அரசு
-
கத்தார் செல்லும் விமானத்தில் கோளாறு; கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து
-
தேர்தலில் தோற்றுப் போனவர்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும்; அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி