பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு: வடலூரில் பட்டப்பகலில் துணிகரம்
வடலூர்: வடலூரில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வடலூர், ராகவேந்திரா சிட்டி, 8வது அவென்யு, முதல் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் சரத்குமார்,36; ஜிம் பயிற்சியாளர். இவர், இன்று (அக்.,26) காலை வீட்டை பூட்டிக் கொண்டு தனது மனைவியுடன் ஒரத்துார் சென்றுவிட்டு, 2 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின் கதவு திறந்து கிடந்தது.
அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த நான்கரை சவரன் நகைகள் ரொக்கம் ரூ.57 ஆயிரம் திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். முதல்கட்ட விசாரணையில், சரத்குமார் தம்பதியினர் அவசரத்தில் வீட்டின் பின்புற கதவை பூட்டாமல் சென்றதால், மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்பேரில், மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
வடலூரில் பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் நகை, பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
அனைத்து முடிவுகளும் ஒரு மனதாக எடுக்கப்பட்டவை :எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதில்
-
கரப்பான் பூச்சி கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!
-
100 கோடி ரூபாய் லஞ்சம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது!
-
என் மீதான குற்றச்சாட்டை தவெக அரசால் நிரூபிக்க முடியாது: சொல்கிறார் முன்னாள் அமைச்சர் மகேஷ்
-
ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் போன் திருடியவர் கைது
-
அரசு பஸ் மோதி வாலிபர் பலி பிறந்த நாளன்று சோகம்