உதயநிதி என்ன துப்பறிவாளரா? அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி
பெரம்பலூர்: விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, கிலோ 30 ரூபாய்க்கு சன்ன ரக அரிசி விற்கப்படுவதை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி துப்பறிவாளர் போல கேள்வி கேட்கிறார் என அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மாறி வரும் பொருளாதார சூழல், வளைகுடா நாடுகளில் நடக்கும் போர், அங்கிருந்து வர வேண்டிய எரிபொருள் தட்டுப்பாடு, அதனால் சந்தை மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கம் போன்ற காரணங்களால், விலைவாசி உயர்ந்துள்ளது. எனினும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அமுதம் அங்காடி வாயிலாக, கிலோ அரிசி 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆனால், ரேஷன் அரிசியை 'பாலிஷ்' செய்து விற்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறுகிறார். அவர் என்ன துப்பறிவாளரா? பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவதாக சொல்வது தவறான கருத்து.
அனைத்து மாவட்டத்திற்கும் தனித்தனி அதிகாரிகள், கட்டுப்பாட்டு அறைகள் என அமைத்து கண்காணித்து வருகிறோம். எதிர்க்கட்சிகள் மழை பாதிப்பிலும் அரசியல் செய்யாமல், மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
அரசு பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும். மாணவர்கள் மனநலனை பாதுகாக்க விளையாட்டு, நூலகம், கலை பயிற்சிக்கு முக்கியத்துவம் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆம், பாலிடால் துப்பறிவாளர்தான். பெத்தாச்சி துபாயில்தான் குடியிருக்கிறது என்று துப்பறிந்துதானே அடிக்கடி துபாய் செல்கிறார்
சின்னக்கலைஞரை இப்படியா அவமதிப்பது. ஜாக்கிரதை - மொத்தமாக திராவிடமே கொந்தளிக்கும்.
ஒரு கேவல...மானவன் இன்னொரு கேவல..மானவனை பார்த்து நீதாண்டா ரொம்ப கேவல..மானவன்னு சொன்னானாம்... அது மாதிரி, ஒரு தற்குறி இன்னொரு கொத்தடிமையை பார்த்து சொல்றது சிரிப்பா இருக்கு
துப்பு கேட்ட அறிவிலார்
அப்போ அந்த ஓட்டைக்குள்ள யாரு வேண்ணாலும் ஆழம் பார்க்கலாம்
அப்படி அவர் சொல்லவில்லையே. துப்பு கெட்டவன் என்று சொல்லுங்கள் மனம் விட்டு சிரிப்பார்
அது எப்படி ஒரு அறிவு கெட்டவன் இன்னொருத்தன துப்பு கெட்டவன்னு சொல்ல முடியும்?
ஆமா உ நிதி இப்படித்தான் பேசுவார். உ நிதியின் நிழல் போன்ற ரமேஷை கைது செய்துவிட்டு உ நிதியை விட்டுவைத்தது உங்களின் தவறுதானே? அரிசி பேர ஊழல்களில் சம்பந்தப்பட்ட திமுகவினருக்கு நல்ல சம்பாதிக்கும் நேரத்தில் ஆட்சி பறிபோனதே என்கிற கோபத்தில் உ நிதி புலம்பத்தான் செய்வார். அடுத்த முறை உ நிதியை கைது செய்யும் முன்னர் எப்படி உள்ளே வைப்பது எங்கே வைப்பது என்றெல்லாம் கணக்கிட்டு கைது செய்வதாக பேட்டியில் நீங்கள் சொல்லியிருந்தால் இப்படி பேசுவாரா உ நிதி
சென்னை மட்டுமே தமிழ்நாடு என நினைக்கிறாரா முதல்வர் என்று தெரியவில்லை... மற்ற மாவட்டங்களுக்கு இதுவரை என்ன திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தினீர்கள்... வெறும் ரோடு ஷோ நடத்தி என்ன பயன்... தமிழகத்தின் பிற பகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் ஏக்கங்கள் ஏராளம்... அதை எல்லாம் கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை.. இந்த ஆட்சி இப்படியே நடக்குமானால்.. விரைவில் மக்கள் தூக்கி வீசுவார்கள்
udayas question is simple .when tende r was given .who is the supplier...answer these.மேலும்
-
மாணவர் போராட்டத்திற்கு அடிபணிந்தது பிரான்ஸ் அரசு; கல்வி முறையில் அதிரடி சீர்திருத்தம்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்