மழை நீர் தேங்கி நெற்பயிர் அழுகல் வயல்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே வடிகால் வாய்க்கால்கள் அடைப்பட்டு, வயில்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர் அழுகுவதை கண்டித்து விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடி கிராமத்தில் நடைபெற்று வரும் வி.கே.டி., புறவழிச்சாலை பணியால் அனைத்து வடிகால் வாய்க்கால்கள் தடைப்பட்டுள்ளது. அதனால், மழை நீர் வடியாமல், வயல்களில் தேங்கி நிற்பதால், நடவு செய்யப்பட்ட சம்பா பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகிறது.
அதனைக் கண்டு ஆவேசமடைந்த விவசாயிகள் நேற்று காலை 9.00 மணியளவில்நடவு வயலில் இறங்கி அழுகி வரும் நெற்பயிர்களை எடுத்து திடிர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது, வி.கே.டி., புறவழிச்சாலை பணியால், வடிகால் வாய்க்கால்கள் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இந்த வடிகால்களை பலர் ஆக்கிரமித்து விளை நிலங்களாக மாற்றி பயிரிட்டு வருகின்றனர். இதனால் நங்குடிகுப்பம் வயல்களில் மழை நீர் வடிந்து செல்லாமல் குளம் போல தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் மூழ்கி அழுகி வருகிறது.
இதேபோன்று கடந்தாண்டு பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், இந்தாண்டும் பாதிப்பு தொடர்கிறது.
எனவே இனியேனும், அதிகாரிகள் வடிகால் வாய்க்கால்களை கண்டுபிடித்து, மீண்டும் வாய்க்காலை உருவாக்கி மழை நீரை வெளியேற்ற வேண்டும். தவறினால், அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
மேலும்
-
பிரதமர் மோடிக்கு எதிரான அவமதிப்புகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்; பாஜ தேசிய தலைவர் நிதின் நபின்
-
அனைத்து முடிவுகளும் ஒரு மனதாக எடுக்கப்பட்டவை :எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதில்
-
கரப்பான் பூச்சி கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!
-
100 கோடி ரூபாய் லஞ்சம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது!
-
என் மீதான குற்றச்சாட்டை தவெக அரசால் நிரூபிக்க முடியாது: சொல்கிறார் முன்னாள் அமைச்சர் மகேஷ்
-
ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் போன் திருடியவர் கைது