வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 71; கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார்.

இன்று (அக்.,26) காலை 5:00 மணி அளவில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னையில் இருந்து வீடு திரும்பிய ஆறுமுகம் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அரை வசரன் நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement