நாய்கள் தாக்கி ஆடுகள் பலி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் அருகே தெருநாய்கள் தாக்கியதில், 16 ஆடுகளை இழந்த விவசாயி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர், முதலிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் என்பவரது நிலத்துக்குள், கடந்த மே 30-ம் தேதி புகுந்த தெருநாய்கள் கூட்டம், ஆடுகளைத் தாக்கியது. இதில், 6 செம்மறி ஆடுகளும், 10 வெள்ளாடுகளும் உயிரிழந்தன.

ஆடுகளின் சந்தை மதிப்பின் அடிப்படையில், 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தும், இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து, நியாயமான இழப்பீடு கோரி சோமசுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், தெருநாய்கள் தாக்குதலில் கால்நடைகள் உயிரிழந்தது மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவ., 11-க்கு ஒத்திவைத்தது.

Advertisement