விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா என்.எல்.சி.,யில் துவங்கியது

நெய்வேலி: என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தில் நேர்வழி நிறைச்செல்வம் என்ற கருப்பொருளுடன் விழிப்புணர்வு வார விழா 2026 துவங்கியது.

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 11 ல் உள்ள அரங்கில் நடந்த விழாவிற்கு தலைமை தாங்கிய என்.எல்.சி., முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பேசுகையில், அமைப்புசார் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், வெளிப்படையான பொதுக் கொள்முதல் மற்றும் மின்னணு ஆளுகை ஆகியவற்றின் முக்கியத்துவம் வாய்ந்தது.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு முன்னேற்றம் அடைந்து வரும் அதே வேளையில், நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை மேலும் நவீனமயமாக்கக் கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்றன. சமூக ஊடகத் தளங்கள் மற்றும் இணையம் முழுவதும் 'போலிப் பதிவுகள்' பெருமளவில் பரவி வருவதன் காரணமாக இன்று மாணவர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களாகும்.

முந்தைய காலங்களில் அறிந்திராத மொபைல் போன்களைக் கவனக்குறைவாகப் பயன்படுத்தினால், அவை இளம் மனங்களை எவ்வாறு எதிர்மறையாகப் பாதிக்கவும், திசைதிருப்பவும் கூடும். மாணவர்கள் விழிப்புடன் இருக்கவும், நெறிமுறையான டிஜிட்டல் பயன்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

மனிதவளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மின்துறை இயக்குநர் சைதன்ய பிரகாஷ் மற்றும் திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா விழாவின் அவசியத்தை வலியுறுத்தி பேசினர்.

Advertisement