நவ. 1 முதல் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயம்; டாஸ்மாக் அறிவிப்பு
சென்னை: நவம்பர் 1ம் தேதி முதல் 1000 ரூபாய்க்கு மேல் மதுபானம் வாங்கும் நுகர்வோரிடம் இருந்து கண்டிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை வழியாக மட்டுமே அதற்கான தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதன் ஊழியர்களுக்கு டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;
தமிழகம் முழுவதும் உள்ள 4048 மதுக்கடைகளில் விற்பனை தொகை பெரும்பாலும் ரொக்கமாகவே பெறப்பட்டு வருகிறது.இப்படி ரொக்கமாக பெறுவதால் ஊழியர்கள் அதை பாதுகாப்பாக வைத்திருத்தல், கள்ள ரூபாய் நோட்டு, பணப்பற்றாக்குறை என பல சிரமங்கள் ஏற்படுகின்றன.
மின்னணு முறையில் பணம் வசூலிக்கப்படும் போது அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவது தடுக்கப்படுகிறது. விற்பனையில் வெளிப்படைத்தன்மை, பணியாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. எனவே, ஆக.7ம் தேதி முதல் இணையவழி மதுபான முன்பதிவு முறை அனுமதிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும் ரொக்கமில்லா மின்னணு பணப்பரிவர்த்தனையை படிப்படியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நவ.1ம் தேதி முதல் 1000 ரூபாய்க்கும் அதிகமாக மதுபானங்களை விற்கும் போது அதற்கான தொகையை மின்னணு முறையில் (யுபிஐ/கிரெடிட்/டெபிட் கார்டு) மட்டுமே பெறப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கும் அதிகமான மது பானங்களை விற்கும் போது இதேபோன்று மின்னணு பரிவர்த்தனையை பின்பற்றவேண்டும். இந்த நடைமுறையை அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களும் செயல்படுத்த அதற்கான வசதிகளை, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட மேலாளர்கள் ஒவ்வொரு வாரமும் கடைவாரியாக மொத்த விற்பனை, ரொக்க விற்பனை, மின்னணு முறை விற்பனை மற்றும் மின்னணு விற்பனையின் சதவீதம் ஆகிய விவரங்களை முதுநிலை மண்டல மேலாளருக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அதை சரிபார்த்து மாதம்தோறும் 5ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் தெரியபடுத்த வேண்டும். மதுபானங்களை வாங்கும் போது நுகர்வோர்களும் மின்னணு பரிவர்த்தனை முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். மேலும் இணையவழி மதுபான முன்பதிவு மூலமும் தொகையை செலுத்தி கடைக்கு நேரில் வந்து மதுபானங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
அனைத்து முடிவுகளும் ஒரு மனதாக எடுக்கப்பட்டவை :எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதில்
-
கரப்பான் பூச்சி கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!
-
100 கோடி ரூபாய் லஞ்சம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது!
-
என் மீதான குற்றச்சாட்டை தவெக அரசால் நிரூபிக்க முடியாது: சொல்கிறார் முன்னாள் அமைச்சர் மகேஷ்
-
ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் போன் திருடியவர் கைது
-
அரசு பஸ் மோதி வாலிபர் பலி பிறந்த நாளன்று சோகம்