புதுச்சேரி அரசுக்கு ரூ.6 லட்சம் அபராதம்; மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
புதுச்சேரி: உத்தரவை அமல்படுத்த தவறிய புதுச்சேரி அரசுக்கு, மத்திய நிர்வாக தீர்ப்பாயம், 6 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தொகையை, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு செலுத்த உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியர் மரியா இனிகோ என்பவர் தொடர்ந்த வழக்கில், ஊதிய விகிதம் மற்றும் ஊதிய நிர்ணயம் தொடர்பாக, 2021ம் ஆண்டு தீர்ப்பாயம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மத்திய தீர்ப்பாயத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது, உத்தரவை அமல்படுத்துவது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரியும், புதுச்சேரி அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் சுவாமிநாதன் மற்றும் நிர்வாக உறுப்பினர் ஸ்ரீவத்சவா அடங்கிய அமர்வு, 'தீர்ப்பாயம் உத்தரவிட்டு, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை' என, கண்டனம் தெரிவித்தது.
அரசின் மெத்தன போக்கை கண்டித்த தீர்ப்பாயம், 6 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. தொகையை அடுத்த அக்., 29ம் தேதிக்குள் அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு செலுத்த உத்தரவிட்டது. மேலும், அதற்குள் நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும்
-
அரசு இசைப்பள்ளியில் பணியிடம் 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
-
அரசு போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்
-
ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ஆர்ப்பாட்டம்
-
ஜி.எச்.,ல் 24 மணி நேரமும் செயல்படும் கேன்டீன் திறப்பு
-
பரபரப்பை கிளப்பிய மாணவி மாயம் பம்பரமாக சுழன்ற மாவட்ட போலீஸ்
-
அணைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கும் பயிர்கள்