தி.மு.க.,வின் பள்ளி கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது! தனியார் பள்ளிகள் அங்கீகாரத்திற்கு ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு
சென்னை : தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க, 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில், தி.மு.க.,வைச் சேர்ந்த பள்ளி கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷ், 48, மீது, ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னையில் நேற்று அவரை கைது செய்து, விசாரணைக்குப்பின் நள்ளிரவில் புழல் சிறையில் அடைத்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது மற்றும் கட்டுமான அனுமதிகள் பெறுவதில் முறைகேடு நடந்ததாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இளங்கோவன் என்பவர் புகார் அளித்தார். விசாரணையில், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த லஞ்ச விவகாரத்தில் ஈடுபட்ட தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவரும், தி.மு.க.,வின் செய்தி தொடர்பு குழு துணைத் தலைவருமான பி.டி.அரசகுமாரை, 58, ஜூன் 27ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவற்றில், குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், நிதி தொடர்பான பதிவுகள், மொபைல் போன்கள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் இதர மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த மகேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டறியப்பட்டதால், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, சென்னை மற்றும் திருச்சியில் உள்ள மகேஷுக்கு சொந்தமான நான்கு இடங்கள், அவரது உதவியாளரான வாளாடி கார்த்திக் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
மேலும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மகேஷ் வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது உதவியாளர் கார்த்திக் வீடு ஆகியவற்றில் மேற்கொண்ட சோதனையில், மடிக்கணினி மற்றும் 'டிஜிட்டல்' ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, திருச்சி தென்னுார் அண்ணா நகரில் உள்ள மகேஷ் வீட்டில் கணினிகள், சில டிஜிட்டல் ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
பின், விசாரணைக்கு ஆஜராகும்படி மகேஷுக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 'சம்மன்' அனுப்பினர். அதன்படி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரான மகேஷிடம் எட்டு மணி நேர விசாரணையில், 246 கேள்விகளுக்கு பதில்கள் பெறப்பட்டன.
இதற்கிடையே, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் வீட்டில் கிடைத்த, 'ஆடியோ' பதிவு ஒன்றை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, 420 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும், முத்துகுமாருக்கு 70 கோடியும், அரசகுமாருக்கு 50 கோடியும், மீதமுள்ள 300 கோடி ரூபாய் மகேஷ் வீட்டில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மகேஷ் மனு தாக்கல் செய்தார். மனுவை நேற்று உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரம் பரபரப்பானது.
சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இருந்த மகேஷை கைது செய்தனர்; சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, இரவு வரை விசாரித்தனர்.
புழல் சிறையில்..:
விசாரணைக்குப்பின், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவனையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இரவில் நடந்த விசாரணை முடிவில், மகேசை நவம்பர் 6ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி, உத்தரவிட்டார். சிறையில் அவருக்கு முதல் வகுப்பு மற்றும் அவரின் உடல்நிலைக்கு ஏற்ற உணவை சிறை நிர்வாகம் வழங்க வேண்டும் எனவும், உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட மகேஸ், சிறையில் அடைக்கப்பட்டார்.
@block_B@
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ''மனுதாரருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும் முன், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ், உரிய அதிகாரியிடம் அனுமதியை பெறவில்லை. காவல் துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது.
''மனுதாரர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். எங்கும் தப்பி செல்லவோ, சாட்சிகளை கலைக்கவோ மாட்டார். அவர், எப்போது வேண்டுமானாலும், போலீசார் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளார். எனவே, அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.
அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதாடியதாவது: இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துகுமார் தலைமறைவாக உள்ளார். வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த விவகாரத்தில், 400 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு உள்ளது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்கினால், அந்த தகவல்கள் எதுவும் வெளியே வராது. மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். முத்துகுமாரை மனுதாரர் தான் பாதுகாக்கிறார். பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்ற காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்று, மகேஷுக்கு முன்ஜாமின் வழங்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.block_B
@block_P@
'அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த மகேஷ் கைது செய்யப்பட்டு இருப்பதன் வாயிலாக, சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என, ஆளும் அரசு நினைக்கிறது.
மகேஷ் தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால், மக்களின் கோபத்தைத் திசை திருப்பித் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும், த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கைது செய்யப்பட்டதை கண்டிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.block_P
தமிழ்நாடு அரசின் சட்டப்படி இலஞ்சம் கொடுப்பதும் குற்றம்.... வாங்குவதும் குற்றம் என்கிறது. அப்படிதான் அரசு அலுவலங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இலஞ்சம் வாங்கிய முன்னாள் அமைச்சரைக் கைது செய்தது சரி என்றால் கொடுத்தவர்களையும் கைது செய்திருக்க வேண்டுமே? என்ற கேள்விக்கு யாரும் இதுவரை பதில் சொல்லவில்லை. தவெக அரசு தன்னைத் தூய சக்தி என்பதை நிரூபிக்கவே இதுபோன்ற தேவையற்ற கைது நடவடிக்கையை மேற்கொண்டு திமுகவுக்குப் புத்தெழுச்சியைத் தந்துகொண்டிருக்கின்றது.
புகார் கொடுத்தவர் 10 வருடம் நடந்த முறைகேடு என்று கூறி இருக்கார் ...... அப்படியானால் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கைதாவாரா ??? அப்படி செய்தால் வரவேற்கலாம் ....இல்லையேல் இது ஒரு இன்ஸ்டாவுக்கு நடந்த நாடகம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
41 கரூர் ஆவிகள் உடனடியாக புழல் ஜெயிலுக்கு வரவும். திருடர் குல திலகம் ஊழல், டிராகுலா அண்ணன் மகேஸை பார்த்து நலன் விசாரித்து, ஜெயில் கண்டிசன் படி நடக்க அறிவுறுத்தவும்.
திகார் ஜெயில், அந்தமான் ஜெயிலில் அடைக்க வேண்டிய கேசு. உள்ளூரில் இருந்தால் ஆட்டையை கலைத்து விட வாய்ப்பு உள்ளது.
மகேஷ் அண்ணே உங்களுக்கு
மகாவிஷ்ணு என்பவரை நினைவு இருக்கிறதா ? அவரை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்திய ஒரு பள்ளி தலைமை ஆசிரியரை நினைவிருக்கிறதா ? அவர் மீது நீங்கள் அநியாயமாக நடவடிக்கை எடுத்தது நினைவிற்கு வருதா ?
கர்மா திரும்ப வருகிறது.
Atlast TN police has shown some nerve and grit. hope this continues with the remainig accused ex ministers.
புலி பசிக்கும்போது புல்லைத் தின்னாலும் தின்னும் .... ஆனா கோல்மால் கட்சி காரனால கையைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாது .....
கண்டிஷன் ஃபாலோ பண்ணுங்க அதனால தான் கைது
எப்போதாவது சுப்ரீம் கோர்ட் திமுக ஆட்களுக்கு எதிராக தீர்ப்பு கூறியுள்ளதா?.
நடமாட வேண்டாமா ??
ஆமாம் ..... உயிர் முக்கியம் ....
திராவிட கதறல் அருமை. இனி தினமும் இப்படி கதறல் கேட்க வேண்டும்மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 2 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை