நெற்பயிருக்கு மருந்து தௌித்தல்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் சுற்று வட்டார கிராமங்களில் விவசாய நிலத்தில் களையெடுத்தல், மருந்து தெளிப்பதில் விவசாயிகள் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கீழத்துாவல், காக்கூர், சாம்பக்குளம், ஏனாதி, நல்லுார், கீரனுார், சித்திரக்குடி கீழக்காஞ்சிரங்குளம், தேரிருவேலி, பூக்குளம், அப்பனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக 30 ஆயிரம் ஏக் கருக்கும் நெல் விவசாயம் செய்கின்றனர். பருவமழையை நம்பி விவசாயிகள் நிலத்தை உழவு செய்து நெல் விதைகள் விதைத் தனர்.
சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. விவசாய நிலத்தில் நெற் பயிர்கள் முளைக்கத் துவங்கியுள்ளன. இதையடுத்து களை எடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சில விவசாயிகள் இயற்கை முறையில் மாட்டு கோமியம், வேப்ப எண்ணெய், உப்பு, எலுமிச்சை சாறு உள்ளிட்ட இயற்கை முறையில் தயாரித்து நிலத்தில் தெளித்து வருகின்றனர். இதனால் களைகள் 10 நாட்களில் கருகி அழிந்து விடும் என்று விவசாயிகள் கூறினார்.
மேலும்
-
வி.கே.டி., சாலை விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையே 45 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு: ஆமை வேகத்தில் நடக்குது வேலைகள்
-
தி.மு.க.,வின் பள்ளி கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது! தனியார் பள்ளிகள் அங்கீகாரத்திற்கு ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு
-
மகேஷ் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஏன்?
-
‘லீவு’ கேட்டு மன்றாடிய மாணவர்களுக்கு நெல்லை, குமரி கலெக்டர்கள் ‘அட்வைஸ்’
-
ஆபாச வீடியோ காட்டி தொல்லை கணவனை கொன்ற மனைவி கைது
-
‘ரிலீப்’ திட்டம் 2027 மார்ச் வரை நீட்டிப்பு