‘ரிலீப்’ திட்டம் 2027 மார்ச் வரை நீட்டிப்பு

புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களால், கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கான ‘ரிலீப்’ திட்டத்தை மத்திய அரசு மேலும் ஆறு மாதங்களுக்கு, மார்ச் 31, 2027 வரை நீட்டித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், “இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஏற்றுமதிகளுக்கு 95 சதவீதம் வரை பாதுகாப்பு வழங்கப்படும்.

‘‘மேலும், பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பு இருந்த அளவை விட காப்பீட்டு கட்டணம் அதிகரித்தால், அதற்கான பாதுகாப்பும் வழங்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய பதற்றங்களால், சரக்கு கட்டணம் மற்றும் காப்பீட்டு கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement