வெவ்வேறு விபத்துகளில் தம்பதி உட்பட 6 பேர் பலி
பெங்களூரு: தனித்தனி இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் புதுமண தம்பதி உட்பட, ஆறு பேர் உயிரிழந்தனர்.
துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின், தாவரகெரே அருகில் நேற்று காலை சென்ற காரொன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை டிவைடர் மீது மோதி, பக்கத்து சாலைக்கு பாய்ந்து, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதில் பயணித்த நிசர்கா, 20, ரூபா, 21, உயிரிழந்தனர்.
இவர்கள் இருவரும், வேலைக்கான இன்டர்வியூவுக்காக, விஜயபுராவில் இருந்து, பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
காரில் மூன்று இளம்பெண்களும், ஓட்டுநரும் இருந்தனர். ஓட்டுநரும், மற்றொரு இளம் பெண்ணும், மற்றொரு காரில் இருந்த மூவரும் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிரா ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
l சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவின், சென்னசந்திரா கிராமம் அருகில், நேற்று காலை சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது, கார் மோதியது. ஸ்கூட்டரில் பயணித்த சண்முகம், 27, இவரது மனைவி மிதுல், 24, உயிரிழந்தனர். சிந்தாமணியை சேர்ந்த இவர்களுக்கு, ஓராண்டுக்கு முன் தான் திருமணம் நடந்தது.
காரில் இருந்த இருவரும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில், சிகிச்சை பெறுகின்றனர். சிந்தாமணி ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
l சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரு தாலுகாவின், ஜவனகொன்டனஹள்ளியில், நேற்று காலை சென்ற பைக் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பைக்கில் இருந்த மாருதி, 30, உயிரிழந்தார். மது என்பவர் காயமடைந்து, சிகிச்சை பெறுகிறார்.
l உடுப்பியின், கோடத மனுாரு கிராமத்தில் வசித்த குருதாஸ் ஷெனாய், 65, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவராவார். இவர் நேற்று அதிகாலை, தேசிய நெடுஞ்சாலை – 66ல், கோடா ஜங்ஷன் அருகில் சைக்கிளில் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார், அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
மேலும்
-
'கரூரில் இருந்து 40 ஆயிரம் லிட்டர் பால் பல்வேறு நகரங்களுக்கு வினியோகம்'
-
வேளாண் சாகுபடி குறித்து மாணவர்களுக்கு பயிற்சி
-
மூதாட்டி கொலையாகி 22 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறல்
-
வேளாண்மை துறை விழிப்புணர்வு முகாம்
-
புகழிமலை கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை
-
மது போதையில் தகராறு செய்தவர் கைது