வேளாண்மை துறை விழிப்புணர்வு முகாம்

கரூர்: கரூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், 'விளை நிலம் காப்போம்' என்ற திட்டத்தின் கீழ், மின்னாம்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்-தது.

அதில், ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் நோய் மேலாண்மை குறித்து, புழுதேரி அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானி தமிழ் செல்வி, வேளாண் இடுபொருட்கள் மானிய நிலையில் வாங்குவது குறித்து, வேளாண் அலுவலர் செந்தில் வடிவு விளக்கம் அளித்து பேசினர். முகாமில், வேளாண்மை துணை இயக்குனர் கோவிந்தசாமி, உதவி இயக்குனர் காதர் மொய்தீன், தொழில்நுட்ப மேலாளர் திவ்ய பாரதி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுரேஷ், நந்தினி உள்பட,
பலர் பங்கேற்றனர்.

Advertisement