மது போதையில் தகராறு செய்தவர் கைது
கரூர்: கரூர் அருகே போலீஸ் ஸ்டேஷன் முன், மது போதையில் தகராறு செய்த, மாநகராட்சி பில் கலெக்டரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், குமாரப்பட்டியை சேர்ந்த கமலேசன் என்பவரது மகன் தனசேகரன், 28; கரூர் மாநகராட்சியில், பில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு திருகாம்புலியூர் பகுதியில், டூவீலரில் மது போதையில் சென்றுள்ளார். அப்போது, பசுபதிபா-ளையம் போலீசார், தனசேகரனின் டூவீலரை பறி-முதல் செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த தன-சேகரன் நடந்து சென்று, தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன் முன் நின்று, டூவீ-லரை தரும்படி தகராறு செய்துள்ளார். மேலும், திருச்சி சாலையில் படுத்து கொண்டு, போக்குவ-ரத்துக்கு இடையூறு செய்துள்ளார். அப்போது, கரூரில் இருந்து திருச்சிக்கு சென்ற இரண்டு பஸ்கள் மோதிக்கொண்டன. இதையடுத்து, தான்-தோன்றிமலை போலீசார் தனசேகரனிடம் பேச்சு-வார்த்தை நடத்தி, போலீஸ் ஸ்டேஷனுக்குள் அழைத்து சென்று அமர வைத்தனர்.
இதுகுறித்து, எஸ்.ஐ., சக்திவேல் அளித்த புகார்-படி, தனசேகரனை தான்தோன்றிமலை போலீசார்
கைது செய்தனர்.
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை