'கரூரில் இருந்து 40 ஆயிரம் லிட்டர் பால் பல்வேறு நகரங்களுக்கு வினியோகம்'

கரூர்: கரூரில் இருந்து, சென்னை உள்பட பல்வேறு நக-ரங்களுக்கு, 40 ஆயிரம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது.

கரூர் மாவட்டம், புகழூர் காவிரி ஆற்றின் கத-வணை கட்டுமான பணி, தோரணக்கல்பட்டி ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் ஆகிய-வற்றில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை, தமிழ்நாடு சட்டசபை அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு மேற்-கொண்டனர்.
அப்போது, தஞ்சாவூர் த.வெ.க.,-- எம்.எல்.ஏ.,வும், உறுதி
மொழி குழுவின் தலைவருமான விஜய் சர-வணன், நிருபர்களிடம் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் பால் கூட்டுறவு சங்கம் மூலம், நாள் ஒன்றுக்கு, 54,960 லிட்டர் பால் கொள்-முதல் செய்யப்படுகிறது. பின்னர். ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் பதப்படுத்தப்படுகிறது. இதில், உள்ளூர் மக்களின் தினசரி தேவைக்காக, 14,000 லிட்டர் பால் வினியோகிக்கப்பட்டு வருகி-றது. உபரியாக உள்ள, 40,960 லிட்டர் பால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் தேவைக்காக தினமும் அனுப்பி வைக்கப்படு
கிறது.
மக்களுக்கு மூன்று வகையான ஆவின் பாலும், எவ்வித தடையுமின்றி கிடைப்பதை உறுதி செய்ய, அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்-யப்பட்டுள்ளன. இங்கு, மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான, விரி-வான திட்ட முன்மொழிவு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக்கப்படும். அதேபோல், மாவட்டத்தின் பிற அத்தியாவசிய தேவை குறித்து அறிக்கை தொகுக்கப்பட்டு, சட்டச-பையில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு, கூறினார்.
கரூர் கலெக்டர் முத்துக்குமரன் உடனிருந்தார்.

Advertisement