மூதாட்டி கொலையாகி 22 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறல்

கரூர்: கரூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில், 22 நாட்களாகியும், குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை மேல விட்-டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இலஞ்சியம், 60; இவர், லாலாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் சிறு, சிறு வேலைகளை செய்து வந்தார். இந்நி-லையில் கடந்த, 6ல் இரவு, லாலாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே, கணபதி என்பவரின் வாழைத்தோட்டத்தில் இலஞ்சியம், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவர் அணிந்திருந்த, இரண்டு கிராம் தங்க மூக்குத்தியை காணவில்லை.
இதையடுத்து, இலஞ்சியம் கொலை செய்யப்-பட்ட இடத்தில் திருச்சி டி.ஐ.ஜி., சிபி சக்கர-வர்த்தி, கரூர் எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். மோப்ப நாய் குறிஞ்சி, கைரேகை நிபுணர்கள் மூலம், இலஞ்-சியம் உடல் கிடந்த இடத்தில், தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கொலையாளிகளை கண்டு
பிடிக்க மூன்று தனிப்படை போலீசாரும் நியமிக்-கப்பட்டனர். கொலை நடந்த பகுதியில் கடந்த, 5, 6ல் பதிவாகியிருந்த, 350க்கும் மொபைல் எண்-களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். சந்-தேகத்தின் அடிப்படையில், ரவுடி பட்டியலில் உள்ள குற்றவாளிகள் என, 30க்கும் மேற்பட்டவர்-களை, தனிப்படை போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தியும் சிக்க-வில்லை.
இலஞ்சியம் கொலை நடந்து, 22 நாட்கள் ஆன நிலையில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய முடியாமல், தனிப்படை மற்றும் லாலாப்பேட்டை போலீசார் திணறி வருகின்றனர்.

Advertisement