அமைச்சர் மகன் பற்றி சர்ச்சை நடிகர் தன்வீர் கவுடா மீது புகார்
பெங்களூரு: அமைச்சர் ஜமீர் அகமது கான் மகன் ஜைத்கான் பற்றி ஆபாசமாக பேசிய, நடிகர் தன்வீர் கவுடா மீது, திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமிக்கும், தர்ஷனின் ஆதரவாளரான நடிகர் தன்வீர் கவுடாவுக்கும் இடையில் 10 கோடி ரூபாய் பண விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
விஜயலட்சுமி உதவியாளர் நாகராஜை மிரட்டும் தொனியில், மொபைல் போனில் பேசிய தன்வீர் கவுடா, சில அரசியல்வாதிகளையும், வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் மகனும், நடிகருமான ஜைத்கான் பற்றியும் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்வீர் கவுடாவை கண்டித்து, அமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தன்வீர் கவுடா புகைப்படம் இருக்கும் பேனர், போஸ்டர்களுக்கு கரி பூசி எதிர்ப்பை பதிவு செய்தனர். தன்வீர் கவுடா மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிலும் புகார் அளித்துள்ளனர்.
மேலும்
-
சரண்டரான நக்சல் முக்கிய தலைவனுக்கு சிறையில் திருமணம்; போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து
-
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
-
15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்
-
விளையாட்டில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
-
உங்கள் குரல் தொழில் சிக்கலும்...தீர்வுக்கான கோரிக்கையும்...
-
முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறை தீர் கூட்டம்