விளையாட்டில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

விக்கிரவாண்டி: சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 24ம் தேதி, செஞ்சி அப்துல் கலாம் அக்னி சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த விளையாட்டுப் போட்டிக்கு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

நமது சிலம்பம் பயிற்சி குழு சார்பில் சிலம்பம், கலை ஓவியம், கைவினை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் எசாலம், எண்ணாயிரம், மண்டகப்பட்டு, கஞ்சனுார், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, மேல் காரணை அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சென்னை, இந்து கல்லுாரி உதவி பேராசிரியர் கண்ணதாசன், இந்திய இளைஞர் விளையாட்டு சங்கத் தலைவர் சிவக்குமார், திட்ட மேலாளர் மனோஜ் போஸ்கோ, வேல்ஸ் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ஜெயலட்சுமி ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.

பயிற்சியாளர் சுரேந்தர் சண்முகம், கல்லுாரி பேராசிரியர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement