முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறை தீர் கூட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், நவ., 2ம் தேதி நடைபெற உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், நவ., 2ம் தேதி காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் பங்கேற்று, தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement