சரண்டரான நக்சல் முக்கிய தலைவனுக்கு சிறையில் திருமணம்; போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து
இதுபற்றிய விவரம் வருமாறு;
ராஞ்சி மாவட்டத்தில் உள்ள பருஹது என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் சிங் முண்டா. நக்சல் தலைவனான அவர், அரசுக்கு எதிராக செயல்பட்டதால் காடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். பாதுகாப்பு படைகளின் தீவிர தேடுதல் வேட்டைக்கு நடுவில் சரண்டாகி நக்கல் பாதையை முடித்துக் கொண்டவர். ஹசாரிபாக் மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளார்.
இதே சிறையில் தமர் மாவட்டம், அரஹங்கா கிராமத்தைச் சேர்ந்த பெண் நக்கல் தலைவரான சோம்வாரி ஹெம்ப்ரோம் என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார். இவரும் நக்சல் பாதையில் இருந்து திரும்பியவர். இவர்கள் இருவருக்கும் ஹசாரிபாக் மத்திய சிறையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில், சிறைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை ஹசாரிபாக் மாவட்ட திருமண பதிவு அதிகாரி ராஜேஷ் எக்கா முறைப்படி பதிவு செய்தார். அனைத்து அதிகாரிகளும், மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சரண் அடைந்த நக்சல்களின் மறுவாழ்வை ஊக்குவிக்கவும், அவர்களையும் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைக்க வழிவகை செய்யும் வகையில் போலீஸ் டிஜிபி தடாஷா மிஸ்ராவின் அறிவுறுத்தல்கள் படி இந்த திருமணம் நடைபெற்றது, குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!