சிலிண்டர்கள் வெடித்த விபத்து புதுமண தம்பதி மூச்சு திணறி பலி
கங்கமனகுடி: சிலிண்டர்கள் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில், புதுமண தம்பதி மூச்சுத்திணறி பலியாகினர்.
பெங்களூரு கங்கமனகுடி அருகே கம்மகொண்டனஹள்ளியில் சிலிண்டர்களுக்கு காஸ் நிரப்பி கொடுக்கும் கடையில், நேற்று முன் தினம் திடீரென 23 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. கடை அமைந்திருந்த கட்டடத்திலும் தீ பிடித்தது. அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். உயிரிழப்புகளோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடை அமைந்திருந்த கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அப்பகுதியில் வசிப்போர் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு படையினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ஒரு ஆணும், பெண்ணும் பாதி உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர்.
விசாரணையில் அவர்கள் பெயர்கள் ஆகாஷ், 28, நாகரத்னா, 24 என்பதும், இருவரும் தம்பதி என்றும் தெரிந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. வாடகைக்கு இந்த வீட்டில் வசித்தனர். சிலிண்டர்கள் வெடித்த போது ஏற்பட்ட தீ, ஆகாஷ் வீட்டிற்கு பரவி உள்ளது.
தீயில் இருந்து தப்பிக்க ஒரு அறைக்கு சென்று கதவை அடைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து கதவை திறந்த போது அங்கு ஏற்பட்ட புகை மண்டலத்தில் சிக்கி மூச்சுதிணறி இருவரும் இறந்தது தெரிந்தது.
மேலும்
-
கோவிலுக்கு வந்து சேர்ந்த ஹாசனாம்பாவின் நகைகள்
-
அமைச்சர் மகன் பற்றி சர்ச்சை நடிகர் தன்வீர் கவுடா மீது புகார்
-
வெவ்வேறு விபத்துகளில் தம்பதி உட்பட 6 பேர் பலி
-
கரும்பு விவசாயிகளை அரவணைத்து செல்லுங்கள் ஆலை உரிமையாளர்களுக்கு சிவகுமார் அறிவுரை
-
நெற்பயிருக்கு மருந்து தௌித்தல்
-
வி.கே.டி., சாலை விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையே 45 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு: ஆமை வேகத்தில் நடக்குது வேலைகள்