கோவிலுக்கு வந்து சேர்ந்த ஹாசனாம்பாவின் நகைகள்
ஹாசன்: ஹாசனாம்பா கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஹாசனாம்பாவுக்கு அணிவிக்க வேண்டிய தங்க நகைகள், கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றின் மதிப்பு 40 கோடி ரூபாயாகும்.
ஹாசனின் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும். அக்டோபர் 29ம் தேதி முதல், நவம்பர் 11ம் தேதி வரை, ஹாசனாம்பா கோவில் திருவிழா நடக்கும். அக்டோபர் 30 முதல், ஹாசனாம்பாவை தரிசிக்க அனுமதி அளிக்கப்படும்.
திருவிழா முடியும் வரை, ஹாசனாம்பா விக்ரகம் தங்க நகைகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். மாவட்ட கருவூலத்தில் இருந்த தங்க நகைகளை மங்கள வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக நேற்று கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
ஹாசன் நகரின், சாலகாமே கிராமத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் பாதுகாக்கப்பட்ட ஹாசனாம்பா தேவியின் தங்க நகைகளை, கோவிலுக்கு கொண்டு வருவதற்கு முன், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அதன்பின் நகைப்பெட்டியை ரதத்தில் வைத்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆர்.சி.சாலை, என்.ஆர்.சாலை, காந்தி பஜார் சாலை வழியாக ஊர்வலமாக, கோவிலுக்கு கொண்டு வந்தனர். இந்த நகைகளின் மதிப்பு, 40 கோடி ரூபாய் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்