100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி
புதுடில்லி: நுாறு சதவீதம் வரை எத்தனால் கொண்ட, 'இ100' எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி அளித்து, மோட்டார் வாகன விதிகளில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.
இதன்படி, அதிக அளவு எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, உரிய சான்றிதழ் பெற்ற வாகனங்கள் இ100 எரிபொருளை பயன்படுத்தலாம். எனினும், தற்போது பயன்பாட்டில் உள்ள, 'இ20' (20 சதவீதம் எத்தனால், 80 சதவீதம் பெட்ரோல்) எரிபொருளில் இயங்கும் வாகனங்கள், 'இ85' அல்லது இ100 எரிபொருளை பயன்படுத்த முடியாது என, அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இ20 அல்லது வழக்கமான பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு, இந்த புதிய விதிகள் பொருந்தாது.
அதிக எத்தனால் கலப்பு எரிபொருளை பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களின் வகைப்பாடு, எரிபொருள் தரம், மாசு உமிழ்வு சோதனை தொடர்பான தொழில்நுட்ப விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை அதிகரிப்பதன் வாயிலாக, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, 20 சதவீத எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் நாடுமுழுதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
சாதாரண பெட்ரோல் வாகனங்களை போல் இல்லாமல், 'பிளக்ஸி பியுல்' எனப்படும் பல வகை எரிபொருளில் இயங்கும் வாகனங்கள், இ85 மற்றும் இ100 போன்ற அதிக எத்தனால் கலப்பு எரிபொருளிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. கடந்த ஜூன் மாதம், 'மாருதி சுசூகி' நிறுவனம், இ20 முதல் இ100 வரையிலான எரிபொருளில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியது. அதேபோல், 'டொயோட்டா, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் நிறுவனங்களும் உருவாக்கி வருகின்றன.
வாசகர் கருத்து (3)
அப்பாவி - ,
27 அக்,2026 - 09:15 Report Abuse
ஐ. ஐ. டி ஆளுங்க அறிக்கை குடுத்தாச்சா? 0
0
suppavi - ,
27 அக்,2026 - 15:39Report Abuse
அப்பாவி உனக்கு கீழ்பாக்கம் டாக்டர் சர்டிபிகேட் கொடுத்திட்டார் 0
0
Reply
SUBBU,MADURAI - ,
27 அக்,2026 - 03:35 Report Abuse
மோடி அரசாங்கத்தையோ அல்லது எத்தனால் கொள்கையையோ குறை கூறுவதற்கு முன், புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.
ஒரு மாதத்தில் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ₹48.18 ல் இருந்து ₹55.70 ஆக உயர்ந்தது. ஆனால், எத்தனால் உற்பத்திக்காகத் திருப்பிவிடப்பட்ட சர்க்கரையின் அளவு 2022 to 2023 ல் சுமார் 12% சதவீதத்தில் இருந்து 2025 to 2026 ல் சுமார் 9% சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது இந்தியாவின் எத்தனால் தேவையில் கிட்டத்தட்ட 75% சதவீதம் சர்க்கரையிலிருந்து அல்லாமல், மற்ற தானியங்களிலிருந்தே பெறப்படுகிறது. சுமார் 306 லட்சம் டன் கரும்பில், சுமார் 28 லட்சம் டன் மட்டுமே எத்தனால் உற்பத்திக்குத் திருப்பிவிடப்பட்டது, அதே சமயம் 278 லட்சத்திற்கும் அதிகமான டன்கள் சர்க்கரை உற்பத்திக்குச் சென்றது. சிவப்பு அழுகல் நோய், உச்சித்துளைப்பான், அதிக மழையால் ஏற்படும் நீர் தேக்கம், பண்டிகைக் காலத் தேவை, உலகளாவிய விநியோகப் பற்றாக்குறை, சர்வதேச விலைகள் 16% சதவீத உயர்வு, ஊக வணிகம் மற்றும் பதுக்கல் ஆகியவையும் இதற்குக் காரணங்களாக இருப்பதாக அரசாங்கம் அடையாளம் காட்டியுள்ளது. அரசு எடுத்த நடவடிக்கைகள்: டீலர்களுக்கான கையிருப்பு வரம்பு 400 டன். மொத்த கையிருப்பு 15 நாட்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆலைகளில் நேரடி ஆய்வுகள். 10 லட்சம் டன் (LMT) வரியில்லா கச்சா சர்க்கரை இறக்குமதி. முன்னதாக, அக்டோபர் 15 முதல் கரும்பு அரவை செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் போதுமான கையிருப்பு உள்ளது. மேலும் 2025to 2026 ஆம் ஆண்டுக்கான விவசாயிகளின் நிலுவைத் தொகையில் 97% சதவீதம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது. எனவே நுகர்வோரை பாதுகாப்போம்! விவசாயிகளுக்கு ஆதரவளிப்போம்! பதுக்கல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்! இதுதான் மோடி அரசின் தாரக மந்திரம். 0
0
Reply
மேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
Advertisement
Advertisement