தேனி சிறையில் 17 கைதிகள் ஓட்டம்: 13 பேர் மீண்டும் கைது
தேனி: தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடினர். பின் ஒருவர் சரணடைந்தார். மாயமானவர்களை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்ட சிறை ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே உள்ளது. இந்த சிறையில் 4 பிளாக்குகள் உள்ளன. நேற்றிரவு 3ம் பிளாக்கில் ஒரு கைதிக்கு வலிப்பு வந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து சிறப்பு எஸ்.ஐ., மதன்மோகன் பிளாக்கை திறந்தார்.


தப்பிய கைதிகளில் ஒருவரான பிரவீன் மீண்டும் சிறையில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தார். சிறையில் ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி தப்பியவர்களை பிடிக்க 17 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார். 17 பேரில் ஒருவர் சரண் அடைந்தார்; 4 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டிரோன் வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் வனப்பகுதியில் தங்கியிருந்த மேலும் 8 பேர் கைதாகினர். எஞ்சிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
@block_P@
கூண்டோடு சஸ்பெண்ட்!
சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் சிறை வார்டன்,சிறை காவலர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். தேனி சிறையின் தலைமை சிறைக்காவலர்கள் 2 பேர், முதல் நிலை சிறைக்காவலர் ஒருவர், பாதுகாப்பு பணியில் இருந்த 2ம் நிலை சிறைக்காவலர்கள் 6 பேர் என மொத்தம் 9 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.block_P
பிரத்யேக வீடியோ!
அதிகாரிகளை தாக்கி கைதிகள் 17 பேர் தப்பி ஓட்டம்; சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சம்பவம்!
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இந்த மாதிரி செய்திகளை பிரசுரிக்க வேண்டாம். நாம் கொண்டாடும் தவக்காவுக்கு முட்டு கொடுக்கும் செய்திகளை மட்டுமே பிரசுரித்தால் நம்முடைய நட்டநிலை மாறாது.
இது என் மனைவின் ஊருங்க. என்ன செய்வது அங்குதான் வீடு இருக்கிறது. ஆமா அந்த ஊரூர்ல சிறை இருந்தாப்ல எனக்கு தெரியாதே? ஆண்டிபட்டி பக்கமா இருக்கிறதாக தெரிகிறது. இவங்க எல்லாம் தேனிகாரங்களாக இருக்கமுடியாது. பக்கத்து கிராமங்கள் ஆட்களாக இருக்கும்..
சிறைக்கு வெளியே பாதுகாப்புக்கு இருந்தவர்களிடம் குருவி சுடும் துப்பாக்கி கூட கிடையாது என்ற உண்மையை இப்படி பொது வெளியில் கசிய விட்டால் என்னாவது...
இந்த கைதிகள் என்ன காரணத்திற்காக சிறைபிடிக்கப்பட்டார்கள் ? 100 கோடி 200 கோடி ஊழல் செய்தவன் , குண்டு வைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்களை கொன்றவன் எல்லாம் பொது வெளியில் சுதந்திரமாக சுற்றி கொண்டிருக்கும் போது சாதாரண கைதிகளை பிடிக்க இத்தனை படைகளா ?
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆளும் கட்சியை கேள்வி கேட்பது தான் நடைமுறை. எப்படி நோகாம அடுத்தவங்க மேல பழியை போடுறாங்க. தி.மு.க., அ.தி.மு.க., வேண்டாம் என்று மக்கள் த.வெ.க.,வை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், எதற்கெடுத்தாலும் விஜய் கட்சிக்கு முட்டு கொடுப்பதினால் என்ன பயன். தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சொல்லப்போனால் இந்த சம்பவத்திற்கு முதல்வர் விஜய் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். என்றைக்கு விஜய் என்ற மாயையில் இருந்து தமிழகம் விடுபடுகிறதோ அன்று தான் தமிழகத்திற்கு விடுதலை. ஜெயிலர் 2 படத்தில் வரும் மூர்த்தி அண்ணன் கேரக்டர் தான் முதல்வர் விஜய். அவரை வைத்து அதிகாரிகள் தான் ஆட்சி செய்து கொண்டு உள்ளனர். தமிழகம் தான் பாவம்.
சினிமா பார்த்து தப்பி ஓடிய தற்குறி கூட்டம் இது
முருகன்...இது திமுகவின் சித்து விளையாட்டு என்று மக்களுக்கு தெரியும்...உனக்கும் தெரியும்
அந்த தற்குறி கூட்டத்தில் முருகனும் இருக்கிறார்
ஆகையால் தான் உங்கள் பெயர் தற்குறி கூட்டம்
அறிவற்ற தற்குறி கூட்டம்
நீங்கள்
What is this ?? not seeing fracture / amputation. Please do it TN police and take them to the same prison with a shorter or 1 limb lesser. It will be a good reminder for rest of their friends. Also their Skull needs to be dented a bit with some utensils - this that warden needs to do.
1971 ல் தமிழ் மண்ணில் திமுக அரசால் திறக்கப்பட்ட மதுக் கடைகளால், தமிழகத்தில் அன்றாடம் வன்முறை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக தொடர்ந்து நிகழ்கிறது. அரை நூற்றாண்டு காலமாக தமிழ் மண்ணில் திராவிட கட்சிகள் ஏற்படுத்திய துயரம் இது. எனவே மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வழி காணாமல், எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும், தமிழகத்தின் சட்ட ஒழுங்கை சரி செய்ய முடியாது.
இதுல குல்லா பார்ட்டி யாரும் இல்லை போல. அதான் மறுபடியும் பிடிச்சி உள்ளே போட்டு விட்டார்கள் போல. இல்லைன்னா அனைவரும் parole தான். தாஜா செய்யும் பிழைப்பு
மோட்சம் கிடைக்காது....
ஜெயில்ல இருந்தது, தப்பிச்சது எல்லாமே உங்க பயலுக தான் அதனால ரோசப்பட்டு கயித்துல தொங்கபிடாது....
தப்பியது சொந்தங்கள் என்று மக்கள் சொல்கிறார்கள்
வாய் திறக்காத, திறமையற்ற தமிழக போலீஸ் அமைச்சரின் கீழ் தமிழக காவல்துறை, சிறைத்துறையும் திறமையற்றதாக மாறி விட்டது.
ஆம் கயர், முந்தைய ஆட்சியில் முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின் மிகவும் சக்திவாய்ந்த திறமை உள்ள சர்வாதிகார முதலமைச்சராக இருந்தார். அவர் மேல் உள்ள பயத்தில் கற்பழிப்பு இல்லை, கொலை இல்லை, பெண்களை கேலி செய்வது இல்லை, எந்தக் குற்றமும் நடக்கவில்லை. காவல்துறையினர் அனைவரும் மிகவும் நேர்மையானவர்களாக இருந்தனர். ரோபோடிக் சர்வாதிகார முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பயந்து அனைத்து குற்றவாளிகளும் தமிழ்நாட்டை விட்டு ஓடிவிட்டனர். இன்னொரு விபீஷயம் அவரது காலத்தில் தேனும் பாலும் தாராளமாகப் ஓடியது . இப்போது உங்களுக்கு சந்தோசம் தானேமேலும்
-
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
-
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு நாளை காலை வரை ரெட் அலெர்ட்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
-
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு
-
புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை