பூட்டிய வீட்டில் பைப் திருட்டு: பொக்காபுரத்தில் இருவர் கைது
கூடலுார்:மசினகுடி பொக்காபுரம் பகுதியில், பூட்டிய தனியார் விடுதி கட்டடத்தை உடைத்து 'செப்டிக் டாங்க்' பைப்புகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
முதுமலை மசினகுடியில் உள்ள, சீகூர் யானை வழித்தடத்தில் விதிமீறி கட்டப்பட்ட சுற்றுலா விடுதிகள் உட்பட பிற கட்டடங்கள், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 2018ல் சீல் வைக்கப்பட்டன.
தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் யானை வழித்தடத்தில் உள்ள தனியார் விடுதி கட்டடங்களை காலி செய்ய உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர். பொக்காப்புரம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட விடுதி கட்டடங்களை இடித்து அகற்றும் பணியை சோலூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த வாரம் துவங்கியுள்ளது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், பொக்காப்புரம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட தனியார் விடுதி கட்டடத்தின் பூட்டை உடைத்து அதிலிருந்த, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'செப்டிக் டாங்க் பைப்புகளை சிலர் திருடி சென்றுள்ளனர். தகவலின் பேரில், மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான தனிக்குழுவினர் விசாரணை மேற்கொண்னர். அதில், அப்பகுதியை சேர்ந்த மகேஷ், 23, சபரீஸ், 23, ஆகியோரை, கைது செய்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
-
8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு
-
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்