புதைக்கப்படும் குப்பை; ‘புதையும்’ வாழ்க்கை: மக்கள் கொந்தளிப்பு
பல்லடம்: குடியிருப்புகள் அருகே குப்பைகளைக் குழி தோண்டிப் புதைப்பதால், நிலத்தடி நீர் மாசடைவதாகக் குற்றம்சாட்டி, கரைப்புதுார் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அருள்புரம் அக்ரி காலனியில், பொதுக் கிணற்றுக்கு அருகே குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதாகக் கூறி, அக்ரி காலனி, காமாட்சி அம்மன் நகர், ஜே.ஜே. காலனி, உப்பிலிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அதிகாரிகள் நீண்ட நேரமாகியும் வராததால், ஊராட்சி அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலைப் பூட்டிய மக்கள், பல்லடம் – திருப்பூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தையில், குப்பைக் குழியை ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு அருகே உள்ள பொதுக் கிணறு, சுற்றுவட்டார மக்களின் நீர் ஆதாரம். அதன் அருகிலேயே குப்பைகளைக் கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் உள்ளது; துர்நாற்றமும் வீசுகிறது. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. குப்பைகள் மட்டுமல்ல, எங்கள் வாழ்வும் சுகாதாரமும் புதைக்கப்படுகின்றன. இந்தக் குப்பைக் குழியை உடனடியாக அகற்ற வேண்டும்” என மக்கள் ஆவேசத்துடன் வலியுறுத்தினர்.
கரைப்புதுார் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மேலும்
-
தமிழ்க்கூடல்
-
வீடுகளில் சோலார் பேனல் அமைத்த பயனாளிகள் அலைக்கழிப்பு: தனிமீட்டருக்கு கூடுதல் பணம் கேட்பதாக புகார்
-
குடிநீருக்கு செயற்கைத் தட்டுப்பாடு
-
மனித – வனவிலங்கு மோதல் தவிர்க்க கல்லுாரியில் பயிற்சி
-
சிறுமி மாயமான வழக்கில் துப்பு கிடைக்காமல் சி.பி.சி.ஐ.டி., திணறல்
-
விருத்தாசலம் பகுதியில் 13 ஏரிகளை குத்தகை எடுக்க விண்ணபிக்கலாம்