தமிழ்க்கூடல்

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் கீழ் செயல்படும் காட்சிக் கூடத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது.‘பரிபாடல் கூறும் வையை’ என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் சுகுமாரி சவுண்டையன் பேசினார். அவர் பேசுகையில், 'எட்டுத்தொகை நுால்களுள் ஒன்றான பரிபாடலில், வைகை ஆறு வெறும் நீர்நிலையாக மட்டும் இல்லாமல் மதுரை மக்களின் வாழ்வோடு இணைந்த இயற்கை வளமாகப் போற்றப்படுகிறது. ஆண்களும் பெண்களும் ஆற்றில் நீராடச் சென்றனர். இதன் மூலம் சங்ககால மக்களின் விழாக்கால வாழ்க்கை, பொழுதுபோக்கை அறிய முடிகிறது' என்றார்.இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் செல்வம் ராமசாமி, உமறுப்புலவர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். காட்சிக்கூட விளக்குநர் புஷ்பா நாச்சியார் ஒருங்கிணைத்தார்.

Advertisement