வீடுகளில் சோலார் பேனல் அமைத்த பயனாளிகள் அலைக்கழிப்பு: தனிமீட்டருக்கு கூடுதல் பணம் கேட்பதாக புகார்
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் வீடுகளில் சோலார் பேனல்களை அமைக்கும் பயனாளிகள் தனிமீட்டர் பொருத்துவதற்கு மின்வாரியத்தினர் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைத்துக் கொள்ள மானியம் வழங்குகிறது. இதற்காக வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிராம தபால் அலுவலகங்களில் பணிபுரியும் போஸ்ட் மாஸ்டர்களிடம் இப்பணியை கொடுத்து வீடுகள்தோறும் விருப்பப்பட்டோருக்கு சோலார் பேனல் அமைக்க கணக்கெடுப்பும் நடத்தியுள்ளது. இவை தவிர மின்வாரியமும் ஊரக வளர்ச்சித் துறையினரும் இணைந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி இது குறித்த தகவல்களை கூறி வருகின்றனர்.
இத்திட்டம் ஏற்கனவே மாவட்டத்தில் செயல்பாட்டிற்கு வந்திருந்தாலும் தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து மானியம் வழங்கப்படும் என அறிவித்து ஊக்கப்படுத்தி வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு சோலார் பேனல் அமைத்து மின்சாரம் தயாரிப்பதில் மும்முரம் காட்டினாலும், இதற்கு கடன் வழங்கும் வங்கிகள் ஏனோ தயக்கம் காட்டி வந்தன. தற்போது வங்கிகள் தாராளமாக கடன் வழங்க முன் வந்துள்ளன. பல பயனாளிகள் கடன் பெற்று வீடுகளில் சோலார் பேனர்கள் அமைத்து வருகின்றனர். ஆனால் தனியார் வங்கிகள் மட்டும் கடன் கொடுப்பதில் இன்னும் தயக்கத்தையே வெளிப்படுத்துகின்றன. அந்த வங்கிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கி கடன் வழங்க உத்தரவிட வேண்டும்.
இந்நிலையில் மாவட்டத்தில் சோலார் பேனல்கள் அமைத்த பயனாளிகள் தனி மீட்டர் பொருத்துவதற்கு மின்வாரியத்தை தொடர்பு கொண்டால் கூடுதல் பணம் கேட்டு அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சோலார் பேனல் அமைக்கும் பயனாளிகளுக்கு உடனடியாக மீட்டர் பொருத்த மின்வாரியத்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
மேலும்
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
-
ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்
-
இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்? முன்னிலை பெற்றும் நெதன்யாகுக்கு பெரும்பான்மை இல்லை
-
அவசர காலத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி