டி.வி.நல்லுார் அருகே சிறுமியை கடத்த முயற்சி? வடமாநில வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பள்ளிக்குச் சென்ற சிறுமியை கடத்த முயன்ற வட மாநில நபர்கள் 2 பேரில் ஒருவரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 6ம் வகுப்பு படிக்கும் 12; வயது சிறுமி. இவர் இன்று (அக்.,28) காலை சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த துணி விற்பனை செய்யும் இரண்டு வடமாநில வாலிபர்கள் சிறுமையை வழிமறித்து கடத்த முயன்றுள்ளனர்.
அப்போது அந்த சிறுமி சைக்கிளையும், பேக்கையும் கீழே போட்டுவிட்டு கூச்சலிட்டு அருகில் உள்ள வயல்வெளி வழியாக ஓடினார்.
அப்போது அங்கிருந்தவர்கள் சிறுமியிடம் விசாரித்த போது 2 வட மாநில வாலிபர்கள் வழிமறித்ததாக கூறியுள்ளார்.
உடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தேடியபோது இருவரில் ஒருவர் அதே பகுதியில் சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடன் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த நபரை அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது விளையாட்டாக செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
ஊர்வலத்துக்கு தடை உட்பட 10 நிபந்தனைகள்; நவம்பர் 1ல் 'இண்டி' கூட்டணி போராட்டத்துக்கு அனுமதி
-
அவசர காலத்தில் மருத்துவ செலவுக்கு உதவிய ‘தினமலர்’ நாளிதழுக்கு நன்றி: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி
-
வானுார் அருகே நடந்த கொலை வழக்கில் 6 பேர் கைது: பணம் தர மறுத்ததால் தீர்த்து கட்டினோம்
-
ஒடும் பஸ்சில் 12 சவரன் கொள்ளை மூதாட்டியிடம் மர்ம நபர்கள் கைவரிசை
-
கஞ்சா விற்ற வாலிபர் கைது
-
வெள்ளாடுகள் திருட்டு போலீஸ் விசாரணை