ஒடும் பஸ்சில் 12 சவரன் கொள்ளை: மூதாட்டியிடம் மர்ம நபர்கள் கைவரிசை
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் 12 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்கலம்பேட்டை ஒத்தகடை தெருவை சேர்ந்தவர் சுகுமாரன், 75. இவரது மனைவி பிரேமா, 70; உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக இருவரும் இன்று (அக்.,28) பகல் 3:00 மணியளவில் மங்கலம்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு அரசு பஸ்சில் வந்தனர்.
பின்னர், மாலை 4:30 மணியளவில் விருத்தாலம் பஸ் நிலையத்தில் இருந்து மற்றொறு பஸ்சில் ஏறி விருத்தாசலம் கடைவீதிக்கு வந்தனர். அப்போது, பிரேமா தனது கையில் வைத்திருந்த பையை பார்தபோது அதில் வைத்திருந்த 12 சவரன் நகையை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மூதாட்டியிடம் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 12 சரவன் நகையை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
-
ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்
-
இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்? முன்னிலை பெற்றும் நெதன்யாகுக்கு பெரும்பான்மை இல்லை
-
அவசர காலத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி