குடியிருப்புகளில் அடிக்கடி மழை வெள்ளம்: ஆக்கிரமிப்பை அகற்ற சர்வேக்கு பின் உறுதி
குன்னுார்: குன்னுார் பேரட்டி சானடோரியம் முதல் சின்ன வண்டிசோலை வரையிலான மழைநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், மழை காலங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே வருவாய் துறை முதல் கலெக்டர் வரை புகார் மனுக்கள் அனுப்பியும், நேரில் கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், கடந்த வாரும் பெய்து மழையின் போது, கால்வாய் அடைப்பு காரணமாக மழை வெள்ளம் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் உள்ள மலையப்பன் காட்டேஜ் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோரி சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தாசில்தார் செந்தில்குமார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கன்டோன்மென்ட் முன்னாள் துணை தலைவர் வினோத் குமார் கூறுகையில்,‘‘இங்கு, 84 சென்ட் அரசு நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து தடுப்பு சுவரும் போட்டுள்ளது. நீர் வழித்தடம் தடுக்கப்பட்டுள்ளது. கலெக்டரிடமும் நேரடியாக கொடுத்தும் தனியாருக்கு ஆதரவாகவும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் தீர்வு இல்லை. உயிர் பலி ஏற்படும் முன் நடவடிக்கை அவசியம்,’’ என்றார்.
தாசில்தார் செந்தில்குமார் கூறுகையில்,‘‘ஏற்கனவே இப்பகுதியில் வருவாய் துறை ஆக்கிரமிப்புகள் அகற்றி வேலி தடுப்பு போடப்பட்டிருந்தது. தற்போது அங்கு தோண்டப்பட்டுள்ள இடம் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடமும் பேசப்பட்டுள்ளது; விரைவில் சர்வே செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்,’’ என்றார்.
மேலும்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
-
வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
-
மருதுபாண்டியர்களுக்கு குருபூஜை
-
மாணவர்களுக்கு அடையாள அட்டை