இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததாக போலி வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்: ஆதாரத்துடன் மறுத்த ராணுவம்
புதுடில்லி: இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை சீனா ஆக்கிரமித்து விட்டதாக காங்கிரஸ் அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசும், ராணுவமும் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்நிலையில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரான ரிது சவுத்ரி சமூக ஊடகத்தில் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துவிட்டது எனக்கூறி இரண்டு வீடியோக்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.
முதல் வீடியோவில், இந்திய பகுதிக்குள் சீன வாகனங்கள் நுழைந்துவிட்டது எனக்கூறியிருந்தார்.
அந்த வீடியோவை ஆய்வு செய்த இந்திய ராணுவம் வெளியிட்ட பதிவில், '' இந்தியா - சீனா எல்லையில் உள்ள வர்த்தக பாதையான சிக்கிமில் உள்ள நாதுலா பாஸ் வழியாக செல்லும் வாகனங்கள் இந்த வீடியோவில் உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக பாதையில் வணிக வாகனங்களின் இயக்கம், சீன ராணுவ ஊடுருவல் என தவறாக சித்தரிக்கப்படுகிறது,'' எனக்கூறியது.
@twitter@https://x.com/MythbusterXX/status/2114650891227672665?s=20twitter
ரிது சவுத்ரி வெளியிட்ட இரண்டாவது வீடியோவில் கிரிஷ் காலியா என்ற ராணுவ அதிகாரி, அருணாச்சல்லில் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்து விட்டது என்று கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றது.
@twitter@https://x.com/MythbusterXX/status/2114400724058804491?s=20twitter
இந்த வீடியோவை ஆய்வு செய்த ராணுவம் வெளியிட்ட விளக்கத்தில்,'' எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடக்கும் ஊடுருவல் குறித்து, 2023 அக்டோபர் 27 ல் ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் எடுக்கப்பட்ட வீடியோவை டீப் பேக் வாயிலாக மாற்றி வெளியிடப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்தாகவோ அல்லது இந்திய ராணுவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவோ அந்த அதிகாரி கூறவில்லை ,'' எனக்கூறியது.
கண்டனம்
இதனையடுத்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில்,'' இந்திய ராணுவத்தின் பிம்பத்தை கெடுக்கும் முயற்சி நடக்கிறது. இதற்காக ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கிய போலி வீடியோவை காங்கிரஸ் பரப்புகிறது. இதற்காக அக்கட்சி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது ஒரு துரோக செயல். நம் எதிரிகளின் இழிவான செயல்களுக்கு இணையானது. இந்தியாவின் எதிரிகளுக்காக காங்கிரஸ் அருவருப்பான பிரசாரததை முன்னெடுக்கிறது,'' எனக்கூறினார்.
காங்கிரசுக்கு நாட்டைப்பற்றியல்லாம் கவலை இல்லை .ஆங்காங்கே காங்கிரெஸ்க்காரர்களால் நடத்தப்படும் ஊழல்வழி பணம் சம்பாதிப்பதை பற்றியும் கவலை இல்லை .இப்போதுதான் ஒருவிடேவ் ஜார்கன்ட் மாநில ஊழலைப்பற்றி வந்தது .அவர்களுக்கெல்லாம் சட்டங்களையெல்லாம் மதிக்காத ராகுல் காந்திக்கு மகுடம் சூட்டி பார்க்கவேண்டும் .அதுமட்டுமே நிறைவேறினால் அதற்க்காக நாட்டையே கூட விலைபேசுவார்கள் . உள்ளூருல ஓநான்பிடிக்கக்கூட முடியல அதனால் தான் வெளியூருல பொய் எதையாவாது பிடிக்கமுடியுமா என்று முயற்சிக்கிறார் .
பாஜக அரசை மடக்குவதாக நினைத்து ராணுவத்தை அவமதித்துவிட்டனர் ....
விஷமத்தனமாக தீய எண்ணத்துடன் தாய்நாட்டை மட்டம் தட்டும் செயல் சதிச்செயல். தேசத்துரோகம். உள்ளே தூக்கி வைத்து மிதிப்பதை விட்டுவிட்டு மன்னிப்பு கேட்கச் சொல்லுவது கேவலம்.
சீ சின்பிங் மற்றும் சோனியா முன்னிலையில் சீனாவில் போடப்பட்ட ரகசிய ஒப்பந்தத்தில் அடிப்படையில் காங்கிரஸ் செய்யும் இந்திய வெறுப்பு பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று..
காங்கிரஸ் என்றாலே பொய், பித்தலாட்டம், திருடர்கள் கூட்டம் என்பது மீண்டும், மீண்டும் நிரூபணமாகிறது.
தேசத் துரோக வழக்கில் ஜெயிலில் போட வேண்டும்
ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சீனாவுக்கு விற்றுவிட்ட பகுதிகளாக இருக்குமோ. அப்படி காங்கிரஸ்காரர்களிடம் கேள்வி கேட்டால் உண்மை வெளிவரும்.
இன்றைய இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனா மட்டும் எதிரி இல்லை. காங்கிரசும்தான்.
சட்டப்படி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்
சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட காங்கிரஸ் இப்படியெல்லாம் கூறுவதில் ஆச்சர்யமில்லை.