வேளாண் கல்லுாரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேளாண் கல்லுாரி பயிற்சி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஆவட்டி ஜெ.எஸ்.ஏ வேளாண் கல்லுாரி மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின்கீழ் கிராமத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் கல்லுாரி மாணவிகள்ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுடன் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
ஊர்வலத்தை தலைமை ஆசிரியர் சிகாமணி துவக்கிவைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள், வேளாண் கல்லுாரி மாணவிகள் இணைந்து நகரின் முக்கிய வீதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
இதில் உதவி தலைமை ஆசிரியர் பார்த்திபன், உடற்கல்வி ஆசிரியர் சத்தியராஜ், வேளாண் கல்லூரி மாணவிகள் தேசிகா, தனுஸ்ரீ, தர்ஷினி, தாட்சாயினி, துர்காதேவி, காயத்ரி, ஹரிணி, ஹரிதா மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
மேலும்
-
உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் வெண்கலம் வென்ற ஓமலுார் மாணவி
-
நிலம் அளந்து தராமல் அலைக்கழிப்பு கண்களில் துணி கட்டி விவசாயி தர்ணா
-
சிவகாசியில் இரு பிரிவினர் மோதல் தடியடி நடத்திய போலீசார்
-
வாடிக்கையாளர் பணப் பாதுகாப்புக்கு வங்கிகளே பொறுப்பு!: 'டிஜிட்டல்' மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
அடுத்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்