இரண்டு முகாம்களில் 56 பேர் தங்க வைப்பு

கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்குவதற்கு, மாநகராட்சி சார்பில் ராமசெட்டிப்பாளையம், சொக்கம்புதூர் ஆகிய இரு பகுதிகளில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

ராமசெட்டிப்பாளையம் முகாமில், 48 பேரும், சொக்கம்புதூர் முகாமில் 8 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் உணவு வழங்கினர். தெலுங்குபாளையத்தில் மழை நீர் சூழ்ந்த வீடுகளில் 47 பேருக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

Advertisement