கோழி வளர்த்தவருக்கு கத்திக்குத்து
ஆலாந்துறை: பூலுவபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன், 20, அங்குள்ள பொது கழிவறை அருகே கோழி வளர்த்தார்.
அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ், 33 விக்னேஸ்வரனிடம், கோழி வளர்க்க கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கோபமடைந்த விஜயராஜ், கத்தியால் விக்னேஸ்வரானை குத்தினார். படுகாயம் அடைந்த விக்னேஸ்வரன்,அரசு மருத்துவமனை சிகிச்சை பெறுகிறார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜயராஜை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement