கருணைக்கிழங்கு சாகுபடி நிலத்தில் மழைநீர் தேங்கியதால் பாதிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கருணைக்கிழங்கு மழைநீர் தேங்கி பாதிப்படையும் நிலையில் உள்ளது.

கள்ளக்குறிச்சி பகுதியில், கருணைக்கிழங்கு டன் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுவதால் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அதிக மகசூல் தரக்கூடிய 10 மாத பயிரான கருணைக் கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் கருணைக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்கில் மழைநீர் தேங்கியுள்ளது.

விரைவில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மழைநீர் தேங்கியிருப்பது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

Advertisement