பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு தேர்வு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு தேர்வு நடந்தது.
பொறுப்பு தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கோளப்பாறை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி, உதவி தலைமை ஆசிரியர் நாகப்பன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் ராமசாமி, பரந்தாமன், கனகவல்லி உள்ளிட்டோர் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்தனர். பெற்றோர்கள் பங்கேற்றனர்.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக ஜெயபிரபா, துணைத் தலைவராக தமயந்தி மற்றும் 20 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தலைமை ஆசிரியர் பழனிசாமி சான்றிதழை வழங்கினார். தேர்வு செய்யப்பட்டவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
பள்ளி ஆய்வக உதவியாளர் வெற்றி வேந்தன், ஊராட்சி செயலாளர் முருகன், கிராம உதவியாளர் ஹரி, கல்வியாளர் ராஜ்குமார் பங்கேற்றனர்.