இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நடந்தது.

ஏ.கே.டி., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த பாசறை நிகழ்ச்சியில், பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் தமிழ் தொடர்பான தலைப்புகளில் கருத்துரை வழங்கினர்.

பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மோட்சானந்தம், சீனிவாசன், செல்வராணி, ஆயுதா, பிரகாஷ், தினேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். தொடர்ந்து பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழை கலெக்டர் பத்மஜா வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அருட்செல்வி, கல்லுாரி தமிழ்த் துறை உதவி பேராசிரியர் பாக்கியலட்சுமி, கல்லுாரி முதல்வர் சிவகுமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement