நிர்சலா பள்ளி மாணவர்கள் தேசிய போட்டிகளுக்கு தேர்வு

கோவை.: வெள்ளலுாரில் உள்ள நிர்மலா மாதா கான்வென்ட் பள்ளி மாணவர்கள், இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சஷ்வந்த், அர்ஜூன், கவின், சூர்யா, ஹிர்த்திகேஷ், காவேரி ஆகிய 5 மாணவர்களும் தேசிய அளவிலான காரத்தே போட்டியில் தேர்வாகியுள்ளனர். கைப்பந்து போட்டியில் ஆலன், காவேரி ஆகிய இரு மாணவர்களும், வில்வித்தை போட்டியில் ஈஷாஸ்ரீ என்ற மாணவியும், டென்னிஸ் போட்டியில் ஆலன் என்ற மாணவரும் சிறப்பாக விளையாடி தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தியப் பள்ளிகளின் விளையாட்டுக் கூட்டமைப்பு நடத்தும் புகழ்பெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தேசிய அளவில் ஆலன், காவேரி ஆகிய இரு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement