மகேஷை அடுத்து சிக்கப்போவது யார்?: திமுக மாஜிக்கள் கலக்கம்
- நமது நிருபர் -
தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது நடவடிக்கையை தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் சிலர் கலக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், அன்பில் மகேஷை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையால், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், எந்த நேரத்திலும் தங்கள் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்ற அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார். அதனால், நேற்று அவர் அறிவாலயத்திற்கு வரவில்லை. ஆழ்வார்பேட்டை வீட்டில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்களுடன், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தார்.
சட்டசபையில் முதல்வர் விஜய் பேசுகையில், 'மூன்று ஊழல் கோப்புகள் என் மேஜையில் உள்ளன. உரிய நேரத்தில் அவற்றை வெளியிட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, 'ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்' என, சவால் விட்டார். அந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில், சமீபத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன், 'முதல்வரின் மேஜையில் உள்ள ஊழல் தொடர்பான கோப்புகள் விரைவில் வெளியிடப்படும்' என்றார்.
இந்நிலையில், ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷ், தி.மு.க.,வில் சாதாரண நிர்வாகி அல்ல. இளைய தலைமுறை முகங்களில் ஒருவர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு நெருக்கமானவர். அவர் கைது செய்யப்பட்டிருப்பது, மேல்மட்டத்திற்கு வைக்கப்பட்ட குறியாக பார்க்கப்படுகிறது. அதை எப்படி எதிர்கொள்வது என, தி.மு.க., தலைமை ஆலோசித்து வருகிறது.
நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமன முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நேரத்தில், நேரு தொடர்பான வழக்கிலும், அவருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு வெளியாகிருப்பது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா ஆகியோர் மீதும், இந்த ஆட்சியில் வழக்குகள் போடப்பட்டு உள்ளன. அந்த வழக்குகளில் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளதால், சட்ட ரீதியாக பாதுகாப்பு தேடுவதில் தீவிரம் காட்டுமாறு, அவர்களை கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (28)
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
29 அக்,2026 - 19:29 Report Abuse
அடுத்தடுத்த தலைவர்களை விடுங்க. அப்பனுக்கும் பிள்ளைக்கும் அடிவயிறு கலங்கற மாதிரி வழக்கு கைவசம் இருக்கா..? 0
0
Reply
Ramesh R - Chennai,இந்தியா
28 அக்,2026 - 23:58 Report Abuse
Option E 0
0
Reply
Matt P - nashville,tn,இந்தியா
28 அக்,2026 - 23:54 Report Abuse
மக்கள் பணத்தை சுருட்டுவுநுகளுக்கெல்லாம் , சட்டப்படி தண்டனை கிடைக்காமல் கூட போகலாம். ஆனால் கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்காவிட்டாலும், மாட்டும்போது , பிறர் தூற்ற , வூண் உறக்கமின்றி தவித்து அல்லலுறவுவதும் தணடனை தான். அனுபவிப்பர்களுக்கு தான் தெரியும். 0
0
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
30 அக்,2026 - 14:56Report Abuse
உன் கூற்றுபடி பிறர் தூற்றுவது சூடு சொரணை உள்ளவர்களுக்குத்தான் உரைக்கும். 0
0
Reply
Aru - ,இந்தியா
28 அக்,2026 - 21:36 Report Abuse
எல்லாரையும் கைது செய்து ஊழலுக்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். மக்கள் வரிபணத்தை கொள்ளையடிப்பதை தடுக்க இந்த ஜெயில் நடவடிக்கை கை கொடுக்கும் 0
0
Reply
Vasan - ,இந்தியா
28 அக்,2026 - 18:24 Report Abuse
அடுத்த வெற்றியாளரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பவும். 0
0
Reply
SJRR - ,இந்தியா
28 அக்,2026 - 17:18 Report Abuse
சந்தானம் டயலாக்:
புடிங்க சார் இவங்கள.... புடிச்சி உள்ள போடுங்க சார்... ஒட்டு போட்ட மக்கள் கிட்ட இருந்தே சுரண்டுற கூட்டத்தை விடாந்திங்க சார்.... 0
0
Reply
ravindran - ,
28 அக்,2026 - 17:11 Report Abuse
பழ. கருப்பையா சொன்ன மாதிரி ஒரு யோக்கியன் தீயசக்தி திமுகவில் கிடையாது 0
0
Reply
சூர்யா - ,
28 அக்,2026 - 12:15 Report Abuse
சும்மா எப்படி நடிவடிக்கை எடுத்தார் பார்த்தாயா? தலைவர் சும்மா கில்லில்ல? என்பதற்காகத்தான் இந்த கைது பில்டப் எல்லாம்.ஆரம்ப கட்ட பரபரப்போடு எல்லாமே அடங்கி விடும். யாருக்கும் தண்டனை கிடைக்கும் வரை எல்லாம் இந்த வழக்கு போகாது.நீதி மன்றத்தால் தண்டனை அறிவிக்கப் பட்ட பொன்முடியே இன்றைக்கு ஜாலியாக வெளியில்தானே இருக்கிறார்? 0
0
Reply
ராமகிருஷ்ணன் பரமக்குடி - ,
28 அக்,2026 - 11:52 Report Abuse
மொகரைகளை பாரு, படங்களில் வில்லனுக்கு பின்னாடி நிக்கிற அல்லக்கைகள் போலவே இருக்காங்க 0
0
Reply
SS - ,
28 அக்,2026 - 11:45 Report Abuse
இறுதி தீர்ப்பு வர பல ஆண்டுகள் ஆக போகிறது. இதில் கலக்கமடைய என்ன இருக்கிறது. 0
0
Reply
மேலும் 17 கருத்துக்கள்...
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
Advertisement
Advertisement